என் மலர்
உள்ளூர் செய்திகள்

குதிரை வாகனத்தில் முருகன் வீதி உலா நடந்தது.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குதிரை வாகனத்தில் முருகன் வீதி உலா
- தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
- முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார். இங்கு நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 4-ம் நாள் மண்டகப்படியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






