என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது.
    • வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல.

    நாகர்கோவில்:

    ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தினார். இதற்கு பதில் அளித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, நாள்தோ றும் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த தி.மு.க.வின் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

    உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடு படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது.

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடி ஆட்சியில்தான். 1967-ம் ஆண்டிலிருந்து 6 முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் பல முறை மந்திரி பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை. மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964-ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி பற்றி ஞாபகம் வராதது அதிசயமே.

    பிரதமர் நரேந்திர மோடி , மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிசான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.72,820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டு உள்ளது.

    ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம் என கூறியதை நிறைவேற்றினீர்களா?

    பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.

    மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது தி.மு.க.வுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    • இதே பிரிவில் மற்றொரு மாணவி 11-ம் இடம் பிடித்துள்ளார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மாணவியும் 11-ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜோதிகாவுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வரும், தமிழ் துறை பேராசிரியருமான குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், அறிவுச்செல்வன், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
    • பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.

    ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.

    இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

    முன்னதாக தலைமை ஆசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பொதுத்தேர்வி ல் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், மாவட்ட அளவிலான தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ-க்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் வழங்கிய சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் பெற்றதற்காக தலைமை யாசிரியர் நீலமேகத்திற்கும், தன்னார்வலர் மீனாம்பாள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வின் போது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினத்திற்கு சால்வை அணிவித்து, அவரிடம் மதுரையில் வழங்கப்பட்ட சுழற்கோப்பையை நாகாரத்தினத்திடம் வழங்கி பாராட்டினர்.

    மேலும், போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

    மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நீலமேகம் பரிசு வழங்கினார்.

    முடிவில் பள்ளி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா விளையாட்டு விழா ஆண்டு விழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஜம்பெரும்விழாக்கள் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரசொலி சிங்காரம் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் டாக்டர் ரவிபெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அன்பழக பாண்டியன் பொருளாளர் சுடர் வழி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதாதேத்தாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் அஞ்சுகம் முத்து வேளாளர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேலன்உள்ளத்தை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

    • 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, நாகூரில் ஆயுர்வேத மருத்துவ முகாம்ம னசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் டாக்டர் ஆர் வெங்கடசுப்பிரமணியன் ஆயுர்வேத மருத்துவர் இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம், நாகூர் - தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

    மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறு வனத் தலைவர் சம்பத்கு மார் வரவேற்றார். இந்நிக ழ்ச்சியில்,தலைமை சட்ட ஆலோசகர் வைரவநாதன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் நாகை மாலி எம்.எல்.ஏ. மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நிஜாமுதீன், நாகப்பட்டினம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி . செய்யது முகமது காஜி ஹீசைன் சாகிப் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். வெங்கட சுப்பி ரமணியன் தலைமையில்,10 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரூபாய் 2 லட்சத்துக்கான மெடிசின்கள் (டானிக், மாத்திரைகள்) இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    இதில்,அறங்காவலர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
    • பக்தர்கள் அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் வாணங்காடு ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கவும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    • மேலப்பிடாகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகப்பட்டினம்:

    திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மேலப்பிடாகை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வாழக்கரை, மீனம்பநல்லூர், களத்திடல்கரை, வில்லுவிநாயகர்கோட்டம், காரப்பிடாகை, நாட்டிருப்பு, கீழையூர், சோழவித்யாபுரம், செம்பியன்மாதேவி,

    பாலகுறிச்சி மற்றும் திருக்குவளை மின்பாதையில் உள்ள கடைத்தெரு, கே.கே.நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகர் தெரிவித்துள்ளார்.

    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.
    • பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.

    விழாவில் பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்ச மிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போட்டும், முடி இறக்கையும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்பு, பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.

    இதில் ஏராளமான கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    தொடர்ந்து, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

    • படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பூவதேவன்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வனிதாகுமாரி (வயது 49). இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாண்டியன் திருவாரூரில் வசித்து வருகிறார். வனிதாகுமாரி தனியாக பூவதேவன்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளிவில் வனிதாகுமாரி வீட்டை திறந்து வைத்து கொண்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வனிதாகுமாரியிடம் கழுத்தில் கிடந்த நகையை கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் கையில் இருந்த கத்தியால் வனிதாகுமாரியின் காது மற்றும் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த வனிதாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் வனிதாகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ×