என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.
    • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    திருவிழா முன்னேற்பா டுகள் குறித்து நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தலை மையில் வேளாங்க ண்ணியில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நாகை திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும்,

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகவும்,

    குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ள தாகவும் தெரி வித்தார்.

    மேலும் வேளா ங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களான ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிமாறன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் அவர் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யத்தை அடுத்த கொள்ளுதீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி.

    இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது.

    இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.
    • இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், பயிர்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் நகை கடன் வழங்குதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் நாகப்பட்டினம் பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் ஆய்மூர் ராமர் மடத்தெருவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் (பொறுப்பு) அன்புமொழி, தற்காலிக பணியாளர் கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர். பின்னர் அவர்கள் நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
    • 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் நள்ளிரவில் ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் பாஸ்கர், அருள்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளம் கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் அருள்செல்வம் என்பவரையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பைபர் படகில் இருந்த பொருட்களை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்செல்வம் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மொத்தம் ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதற்கால யாகசால பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதி நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பெருங் கடம்பனூரில் காத்தவராயன் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபி ஷேக விழா கடந்த 19-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, பாலினக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாகசால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று 2-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்தவுடன், மகா பூர்ணாஹூதி நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின், சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து கோவிலை சுற்றி வந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் பக்த்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுந்தர விநாயகர், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கலந்து கொண்ட பக்தர்களுக்கு நாகப்பட்டினம் தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சன்னமங்கலம், பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 நபர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிபிசிஎல் அலுவலகத்திற்குள் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    மேலும் இதற்கு நிறுவன அதிகாரிகளே காரணம் என்றும்,இதனால் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி இந்த போராட்டத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும்

    சிபிசிஎல் பொது மேலாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸ் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது.
    • அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சாலையோ ரமாகவும், வயல் வெளிகள் நடுவிலும் மின்கம்பங்கள் அமைக்க ப்பட்டு வாழ்ம ங்கலம் பூலாப்பள்ளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் இயக்கு அறைக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் சேதம டைந்து தாழ்வாக செல்கிறது.

    இதனால் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாக னங்கள் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்கு ள்ளாகின்றனர்.

    மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய அறுவடை இயந்திர ங்களை கொண்டு செல்ல முடியாமல் குறுவை நெற்பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை எனவும் விவசா யிகள் விவசாய பணிகளை செய்ய சேதமடைந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
    • கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் 10-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலயம் எடுக்கும் விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் ஆழ்வார் மண்டபத்தில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், வார வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலயத்தை வைத்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ- மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பின், அவரவர் தலையில் மண்பானையை வைத்து சுமந்து வந்து கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை மன்ற தலைவி கிருஷ்ணம்மாள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் செய்தி ருந்தனர்.

    பின்னர், பக்தர்கள் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர் .இப்பகுதி பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு ஒவ்வொரு நாளும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும்.

    ஆனால் தற்போது 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. வரும் குடிநீரை வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது பல நாட்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர்வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முழு கொள்ளளவான 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் .

    இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பேரூராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு போக்குவதற்காக பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சை யன்,செயல் அலுவலர் சரவணன் ஏற்பட்டின் பேரில் வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, லிங்கத்தடி, ஓரடியம் புலம் ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்கள் வசூலிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 8 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    எனவே நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் பாலம் வரை பிரதான சாலையில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

    அகற்றப்பட்ட அனைத்து பொருட்களும் நகராட்சியால் கையகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    வேதாரண்யம்:

    காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு வட்ட தலைவர் செல்வ ராணி தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவா் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    சங்க பொறுப்பாளா் செந்தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    இதில் சத்துணவு ஊழிய ர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் சத்துணவு அமைப்பாளா் உஷா நன்றி கூறினார்.

    ×