என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார்.
    • சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் முத்துராமன். முன்பு நகை வணிகம் செய்து வந்தார். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் வாங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு டயர்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இன்று காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் டயர்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முத்துராமன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை சென்று வருவதும் பின்னர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகி யுள்ளது. இதனால் மர்ம நபர்கள் காரில் வந்து டயர்களை கழட்டி திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சீர்காழி நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லணை தொடங்கி பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார்.‌
    • ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவா லங்காட்டில் நீர்வளத்து றையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    காவிரி ஆற்றில் கல்லணை தொடங்கி காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார். திருவாலங்காடு கிராமத்தில் உள்ள காவிரி, விக்கிரமன் தலைப்பிலும் ஆய்வு செய்து பாசன வசதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், வீரமணி மற்றும் உதவி பொறியா ளர்கள் உள்ளிட்ட அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • ம.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி.
    • கழக கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). இவரது மனைவி கீர்த்திகா (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கலைவாணன் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்றும் அவர்கள் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து

    கலைவாணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

    • சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.

    இக்கோயிலில் காஞ்சிபுரத்தை தலைமை யிடமாக கொண்டுள்ள ஆதி சைவாச்சாரியார் தேசிகர் சங்கத்தினை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மண்டல அபிஷே கம் நடந்தது.

    முன்னதாக ஆண்டவினாயகர், பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்பாள், முத்துசட்டைநாதர்சுவாமி, திருஞானசம்பந்தர்சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.பின்னர் நடைபெற்ற சுக்ரவார வழிப்பாட்டில் பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முத்துசட்டைநாதர்சுவாமி சிறப்பு வழிபாடும், மலைமீது அருள்பாலிக்கும் சட்டைநாதர் சுவாமிக்கு புனுகுசாத்தி, பயர்பாயாசம், வடை நிவேதனம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளாக ஆதி சைவாச்சாரியார் சங்கத்தினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவேற்காடு அரிமா முனைவர் .சம்பந்தம் மற்றும் ஆத்மநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முன்னதாக கடந்த 21-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • கடம் புறப்பட்டு நடைபெற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆம ப்பள்ளம் கிராமத்தில் பழனியாண்டவர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோ யில் திருப்பணிகள் செய்ய ப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது. முன்ன தாக புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலைபூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்கிட கோயிலை வலம்வந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • ஆங்கில, தமிழ் படிப்பு திறன்களை ஒவ்வொரு மாணவரையும் வாசிக்க சொல்லி கேட்டறிந்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளதா?

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளனவா எனவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்களா எனவும, பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடி சரியான, முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே இருந்து பயிலும் மாணவர்களிடம் ஆங்கில படிப்பு திறனையும், மற்றும் தமிழ் படிப்புத் திறனையும் வாசிக்க சொல்லி ஒவ்வொரு மாணவரையும் கேட்டறிந்தார்.

    பின்னர், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பாபு, சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • 3 நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருந்தது.
    • ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பை கொண்டு விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நல்லபாம்பு வேலி ஓரம் கிடந்தது.

    பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர் மூன்று நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தனர்.

    அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட்டப்பா மாட்டிக்கொண்டதும்,

    இதனால் இந்தப் பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் புளிச்சக்காடு தினேஷ் என்பவருக்கு இந்துமதி குடும்பத்தினர் தகவல் அளித்தனர்.

    இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தினேஷ் பெயிண்ட்டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பினை லாவகமாக பிடித்து, சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றினார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டார்.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது.

    அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது.

    பழமை வாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    இந்நிலையில், நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலை மையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
    • ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பா. ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9-ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது-

    மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவி டம் வழங்கிய செங்கோலை நேரு கைத்தடியாக அலகாபாத் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலைதிருவா சகம், கோளறு பதிகம் தேவாரத்தோடு பாராளு மன்றத்தில் செங்கோலை நிறுவி பாரத பிரதமர் மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.

    ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி வழக்கறிஞர் இராம. சிவசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

    தேசிய பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்க ராஜன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளீட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

    • சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
    • கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர். 

    • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி சிறப்பு அரங்குகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

    மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் கால்நடை வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகர், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ சிகிச்சை பலன் பெற்றனர்.

    ×