வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரின் 4 டயர்களும் திருட்டு

வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
டயர்கள் கழற்றப்பட்டுள்ள கார்.
டயர்கள் கழற்றப்பட்டுள்ள கார்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் முத்துராமன். முன்பு நகை வணிகம் செய்து வந்தார். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் வாங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு டயர்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இன்று காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் டயர்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முத்துராமன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை சென்று வருவதும் பின்னர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகி யுள்ளது. இதனால் மர்ம நபர்கள் காரில் வந்து டயர்களை கழட்டி திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சீர்காழி நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com