என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காட்டில் நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
காவிரி தலைப்பில் நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு
- கல்லணை தொடங்கி பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவா லங்காட்டில் நீர்வளத்து றையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி ஆற்றில் கல்லணை தொடங்கி காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார். திருவாலங்காடு கிராமத்தில் உள்ள காவிரி, விக்கிரமன் தலைப்பிலும் ஆய்வு செய்து பாசன வசதிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், வீரமணி மற்றும் உதவி பொறியா ளர்கள் உள்ளிட்ட அலுவ லர்கள் உடனிருந்தனர்.
Next Story






