என் மலர்
மயிலாடுதுறை
- ஆறு முதல் 18 வயது பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடத்தை மாற்ற வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆறு முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகள் இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 100 சதவீத பள்ளியில் சேர்க்க திட்டமிடுவதற்கான குழு கூட்டம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமையேற்றார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி வரவேற்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி,கோமதி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மங்களதாசன், இளஞ்செழியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் விஜயா,காவல் ஆய்வாளர் அலாவுதீன், ஒருங்கிணைப்பாளர் ஐசக் ஞானராஜ், சிறப்பு ஆசிரியர்கள் ராஜலட்சுமி,பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபு கழேந்தி பேசுகையில், பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடம் ஒன்றியத்தை மாற்றுவதற்கு குழு உறுப்பினர்களுக்கு முழுமையான பங்கு உண்டு.
நமது ஒன்றியத்தில் சுமார் 196 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
இதில் 136 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம்.
செங்கல் சூளைகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற வற்றில் பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள் இருந்தால், உடனடியாக 9788858785, 9965098829 இந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
- டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
- டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி ஆக்கூர் முக்கூட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு 2014ன் கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்கூர் டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
- 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேளாண்மை கிடங்கு கட்டிடம் உள்ளது.
- கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கட்டிடத்தில் இடுபொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலக கட்டிடத்துக்கு அருகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேளாண்மை கிடங்கு கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு தேவையான விதை நெல், உரங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டங்கள், வேளாண் கருவிகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.
பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள மேற்கூரையின் வழியே மழை நீர் உள்ளே புகுந்து வந்ததால் கட்டிடத்துக்குள் வேளாண் இடு பொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது.
இதனால் வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் அலுவலக கட்டிடத்துக்குள் ஒரு பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டு காலமாக இந்த கட்டிடத்தில் இடுபொருட்கள் வைப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கட்டிடம் பராமரிப்பின்றி இருந்து வருகிறது.
எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு அதில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி யிடங்களுக்கா ன அறிவிப்பு தொகுதி 1 மற்றும் 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
மேலும், இந்த தேர்வுகள் குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் போன்ற இதர விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட அறிவிப்பை எதிர்நோக்கி இலவச பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்விற்கான பாடக்கு றிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
எனவே, இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 94990 55904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்கு சென்று சேகரிக்கின்றனர்.
- எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலைய த்திற்கு செல்லும் சாலை உள்ளது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் எதிர்ப்புறம் மற்றும் பயணியர் விடுதி, சார் பதிவாளர் அலுவலகம் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம், ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மேலும் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் தினந்தோறும் குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
குவிந்து வரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று சேகரிக்கின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்ப டும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இவ்வாறு சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படும் போது அதிக அளவில் புகை சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
- புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்த், இவரது மகள் (வயது 19).
இவருக்கும் மயிலாடுது றையைச் சார்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர் 20 என்ற வாலிபருக்கும் சில ஆண்டு களாக காதல் ஏற்பட்டது.
காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.
தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்து றையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் காவல்து றையினர் மறுத்து விட்டனர்.
பின்னர் பெண்ணை காதல் திருமணம் செய்த கணவனுடன் போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர்.
ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலிஸ்சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மாயூரநாதர் கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
- யானையின் கண், தோல், பாதம்,ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார், மீனா ஐ.எப்.எஸ் பரிந்துரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர்.
அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
- லாரிகளை மாற்று பாதையில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தி லிருந்து ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்திற்கு புதைவ டைமின்கம்பி கொண்டு செல்வதற்காக வைத்தீஸ்வ ரன் கோயிலிருந்து சீர்காழி நகர் பகுதி வழியாக ஆச்சாள்புரம் துணை மின்நிலை யத்திற்கு பூமிக்கு அடியில் தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
இந்த பணிக்காக சாலை யோரம் ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடை பெறுகிறது.
இந்த பணியில் தோண்டப்படும் மண் சாலை யோரம் கொட்டி வைத்து நடைபெறுவதால் சாலை குறுகி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதோடு புறவழிச்சாலை பணிக்காக அதே வழிதடத்தில் லாரிகளில் மண் ஏற்றி செல்லும் லாரிகளும் சென்று வருவதால் பள்ளி நேரங்களில் வாகனஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் போக்குவரத்து காவல் துறை யினர் மின் புதைகம்பி பணிகள் நிறைவ டையும் வரை கனரக வாகனங்கள், லாரிகளை மாற்று பாதையில் இயக்கிட பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி கலெக்டர் பார்வையிட்டார்.
- சத்துணவு கூட்டத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத் திறன் பரிசோதிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவனாக ஆங்கில பாட நூலில் உள்ள வாக்கியங்களை படிக்க சொல்லி கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார்.
மேலும் ஊராட்சி தொடக்கப்பள்ளி சென்ற கலெக்டர் மகாபாரதி 1-ம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் பள்ளி பாடல்கள் பாட சொல்லிகேட்டறிந்தார்.
அப்போது மாணவ மாணவிகள் உற்சாகமாக பாடத்திட்டத்தில் உள்ள பாடல்களை கலெக்டர் முன்பு ஆடிப்பாடினர். தொடர்ந்து அங்குள்ள
சத்துணவு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தயார் செய்து வைக்கப்பட்டி ருந்த உணவுகளின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அரிசி,துவரம் பருப்பு, இருப்புகளை ஆய்வு செய்ததோடு எலக்ட்ரானிக் தராசின் பயன்படுத்தி பொருட்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.
மேலும் அரிசி, சர்க்கரை ஆகியவை மூட்டைகளில் சேதம் அடைந்து சிந்தியிருப்பது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, எலிகள் நுழைந்து பொருட்களினை சேதம் ஏற்படுத்துவதாக கடை விற்பனையாளர் கூறினார்.
எலிகள் நுழையா தவாறு பாதுகாப்பாக பொருட்களை வைத்திட தேவையான நடவடிக்கை களை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார்.
ஊராட்சியில் புதிதாக ரூ. 28 .25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அப்பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடிக்கு சென்ற ஆட்சியர் மகாபாரதி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகளிடம் காலை என்ன உணவு தரப்பட்டது என்று கேட்டறிந்து அந்த உணவினை வரவழைத்து அதன் ருசி, தரத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
முன்னதாக கீழையூர் காத்திருப்பு இழப்பு சாலை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணிகள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆட்சியர் பார்வைக்கு ஆய்வு செய்தார் பின்னர் செம்பதனிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார் ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய உதவி பொறி யாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இறால் மற்றும் கெண்டை மீன்கள் கடந்த 27-ந் தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது.
- 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்று கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நவீன மீன் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.
இந்த விற்பனை நிலையத்திற்கு அருகே உள்ள மீன் தொட்டியில் விற்பனை போக மீதம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மட்டும் கெண்டை மீன்கள் கடந்த 27 தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் சிவகுமார் (வயது 47) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சீர்காழிஅருகே சட்டநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 31) ஈசானிய தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 56) ஆகிய இருவரும் மீன்களை திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
- பால்குட திருவிழா கணபதி ஹோமம், மகாகாளி மூல மந்திர ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி ஊராட்சி அஞ்சாறுவார்த்தலை பழைய தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் கரகம், பால்குட திருவிழா கணபதி ஹோமம், மகாகாளி மூல மந்திர ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம், பால்குட திருவிழா நேற்று நடந்தது.
முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து கரகம், பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும்.
- இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கின் வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.
இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் நடராஜன், சிவபழனி ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த ஏலத்தில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றும், பருத்திக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






