என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • குழந்தைகள் தவறுதலாக உபயோகப்படுத்திவிடும் அபாயம் உள்ளது.
    • சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த "ரேடால்" என்ற மருந்தானது வீட்டில் எலிகளை கட்டுப்படுத்த பயன்படு த்தப்பட்டு வருகிறது. இதனை குழந்தைகள் தவறுதலாக உபயோக ப்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

    இதற்கு எதிர்வினை மருந்து இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்துள்ளனர்.

    எனவே, இந்த எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மருந்தை எக்காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். "ரேடால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆய்வில் "ரேடால்" மருந்து விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், "ரேடால்" மருந்து விற்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால், வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம். தொலைபேசி எண்கள்:-

    குத்தாலம்- 98945 48257, மயிலாடுதுறை- 88700 68125, செம்பனார்கோயில்- 63698 95439, சீர்காழி- 80722 20767, கொள்ளிடம்- 99944 82889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி நிர்வாக அனுமதி பெறாமலும் பணிகள் நடக்கிறது.
    • கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சால் பொதுமக்கள், நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்படுவர்.

    சீர்காழி:

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமாரை சந்தித்து திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருமுல்லைவாசல் காந்திநகரில் குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகருகே அமைந்துள்ள இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக புதிய 5ஜி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி மன்ற நிர்வாக அனுமதி பெறாமலும், இந்த பணி நடக்கிறது.

    செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.

    எனவே உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.

    தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    • தற்பொழுது இரு மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும்.
    • அந்தியோதயா விரைவு ரெயில், சீர்காழியில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஒரு வழி மார்க்கமாக நின்று சென்று கொண்டிருந்த ஐந்து ரெயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ராமலிங்கம் எம்.பி,யுடன் நான் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தோம்.

    இதன் பிரதிபலனாக தற்பொழுது இரு வழி மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ரெயில்வே மேலாளர் ஹரிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் நகலை ரயில் உபயோ கிப்பாளர்கள் சங்கத்தினர் பெற்றுவந்துள்ளனர்.

    இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், சீர்காழியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் இதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன், செயலாளர் மார்க்ஸ் பிரியன், பொருளாளர் முஸ்தபா நந்தகுமார், ரயில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகசண்முகம், தி.மு.க நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் துரை, நவக்கிரக சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டார்கள்.
    • 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் குன்னம் சந்தோஷ்,கவி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன் இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது .

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த42 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் பரிசை குன்னம் அணி தட்டி சென்றது. 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    போட்டியில் முதல் பரிசு ரூ. 15,000 மற்றும் கேடயம் ஆகியவற்றை டெம்பிள் ரன் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் மலர்க் கண்ணன் , சொர்ண பால், உறுப்பினர்கள் அருணாச்சலம், ராதாகிருஷ்ணன் ,ஹாஜா ஷெரிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள்,

    சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
    • நாளை காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் பள்ளியில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.

    அந்த வகையில், மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    போட்டிகளுக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு 74024 38667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
    • காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்களிக்கிறார்.

    மலை மீது தோணியப்பர், சட்டை நாதர் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் தெற்கு கோபுர வாசல் அருகே எழுந்து அருள் புரிகின்றனர்.

    பிரசித்திப் பெற்ற இக்கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தோணியப்பர் சுவாமி, திருநிலை நாயகி அம்மன், அஷ்ட பைரவர் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் சுவாமி படங்கள், பிரசாதங்களை வழங்கினார்.

    அவருடன் ,திமுக நிர்வாகி முத்து.

    தேவேந்திரன் ,அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் உடன் வந்தனர்.

    • மயிலாடுதுறையில் 12-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடை பெற உள்ளது.
    • எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், நாளை மறுநாள் 12-ந்தேதி(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு ஏஜெண்டுகளின் செயல்பாடுகள், எரிவாயு சிலிண்டர் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளையும் அனைத்து எரிவாயு நுகர்வோர் அமைப்பினர் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நேரில் தெரிவித்துக் கொள்ளலாம்.

    இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து, மயிலா டுதுறை மாவட்ட எல்லை க்குள் காணாமல் போன செல்போன்களை கண்டறிந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில், சைபர் கிரைம் காவல் அய்வாளர் புயல் பாலச்சந்திரன், தலைமை காவலர் சுதாகர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்க ப்பட்டன.

    இைதயடுத்து, எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பற்றப்பட்ட செல்போ ன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஒப்படைத்தார்.

    இதனால் செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பயிர் நெருக்கமாக இருப்பதால் சரியாக தூர் கட்டுவதில்லை.
    • கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குருவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அதில் மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை ஆய்வு செய்தார் குருவை தொகுப்பு திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடை வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

    அதன்பிறகு புங்கனூர் கிராமத்தில் செல்வராஜ் என்ற விவசாயின் வயலில் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலினை ஆய்வு மேற்கொண்டார்கள் அப்போது விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ விதை அளவு போதுமானது மேலும் ஒரே சீரான இடைவெளியில் நெல் பயிர் உள்ளது பயிருக்குப் பயிர் போதுமான இடைவெளி இருப்பதனால் நன்கு தூர் பிடித்துள்ளது. சாதாரண முறையில் விதைப்பு செய்வதால் விதை அளவு அதிகம் தேவைப்படுவதுடன் பயிர் நெருக்கமாக இருப்பதினால் சரியாக தூர் கட்டுவதில்லை

    எனவே அனைத்து விவசாயிகளும் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன். விதைப்பு கருவி 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை துறையில் உள்ளது எனவே தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவல ர்களை தொடர்பு கொண்டு 50 சத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார் ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சீர்காழி ராஜராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்    

    ×