search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு பண்டகசாலையில் தக்காளி விற்பனை தொடக்கம்
    X

    தக்காளி விற்பனையை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    கூட்டுறவு பண்டகசாலையில் தக்காளி விற்பனை தொடக்கம்

    • தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.

    தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    Next Story
    ×