செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
Published on

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார்.

மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள்,

சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com