மனைவிைய கொன்ற கணவர் கைது

இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவிைய கொன்ற கணவர் கைது
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). இவரது மனைவி கீர்த்திகா (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கலைவாணன் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றும் அவர்கள் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து

கலைவாணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com