என் மலர்
மதுரை
- நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள நெட்டுக்குளம் கிராமத்தில் நீதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷே விழா நடந்தது. இதனை முன்னிட்டு திருவேடகம் கோபால கிருஷ்ணன் ஜோசியர் தலை மையில் 2 நாட்கள் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மேள தாளத்்துடன் சிவாச்சாரி யார்கள் புனித நீர் குடங்க ளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
- நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை.
- தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 75 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 63 உதவியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்குவது, உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்குவது மற்றும் டைட்டில் பார்க் அமைப்பதற்காக 5.60 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ரூ.600 கோடியில் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-வது வார்டில் மாநகராட்சி சார்பில் எந்த அடிப்படை வேலைகளும் நடைபெறவில்லை. இதுவரை 19 மாநகராட்சி கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும், வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சித்திட்ட பணிகளும் நடைபெறாதது கவலையளிக்கிறது என்றார். பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே ஒரு வார்டுக்கு 5 தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் சாலை மற்றும் சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க ஒப்பந்தம் எடுப்பவர்கள் அதனை சரியாக செய்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் மக்களுக்கு சேவை செய்யத்தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும் நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தின்போது அவையில் அமர்ந்திருந்த எதிர்கட்சி தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த சோலைராஜா, லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் குறித்து மாநகராட்சி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மக்களுக்கு குடிநீர் முக்கியமானது. அதற்கான வேலைகள் குறித்து விபரமாக சொல்லுங்கள் என கூறினார்.
மேலும் எனது வார்டில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன் வைத்தார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு பதிலளிடையாக அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. கவுன்சிலர்கள் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று கோஷமிட்டனர். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சோலைராஜா மகன் இளவரசன், கவுன்சிலர்களை பார்த்து சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே ரகளை ஏற்பட்டது.
உடனே இளவரசனை வெளியேற்றுமாறு மேயர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டம் பரபரப்பாக இருந்தது.
- மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி பேசுகையில், எனது வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. ரூ. 1 லட்சத்து 20 மதிப்பிலான வேலை நடந்து இருக்கிறது.
அதற்கு பணம் இன்னும் தரவில்லை. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டதை தவிர வேறு வேலை நடக்கவில்லை. 82-83 வார்டுகள் இணைப்பு பாதையில் மின்விளக்குகள் 6 மாதமாக எரியவில்லை என்றார்.
85- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார் பேசுகையில், எனது வார்டில் வணிகர் வளாகம் அமைக்க வேண்டும். பேவர் பிளாக் சாலை மேடு பள்ளமாக இருக்கிறது.
சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும். இதற்கு முன்பு எனது வார்டில் பணியாற்றிய உதவி பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் நன்றாக பணியாற்றினார்கள். எனவே மீண்டும் அவர்களை எனது வார்டுக்கு மாற்ற வேண்டும் என்றார்.
- அலங்காநல்லூரில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள், ஆலை தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கவனஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கும் ேமற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.
அவர்கள் கோரிக்கை களை வலியு றுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணி செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்டி ருந்த போலீசார் பேரணிக்கு அனுமதி யில்லை. எனவே கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீ சாருக்கும், விவசாயி களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
- ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110ஆக உயர்ந்துள்ளது.
- விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை
மதுரையில் தக்காளி, மிளகாய், முருங்கைக்காய், கேரட் பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி யில் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகம் அமைந்துள் ளது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது சமையலில் அத்தியா வசியமாக பயன்படுத்தப் படும் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ. 110 ஆக அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 60-க்கு விற்ற மிளகாய் ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.50, கேரட் கிலோ ரூ.60, முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.120, பட்டர் பீன்ஸ் கிலோ ரூ. 120, சோயா பீன்ஸ் கிலோ ரூ.120, முட்டைக்கோஸ் ரூ.25, பூண்டு கிலோ ரூ.210, உருளைக்கிழங்கு கிலோ ரூ.70, பீட்ரூட் கிலோ ரூ. 60 ஆகிய விலைகளில் விற்கப் படுகிறது.
சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
- மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அந்தப்பகுதியில் ஆக்கிர மித்து இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு களை அவர்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை. மேலும் இந்தப்பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படு கிறது.
சில நேரங்களில் பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும், பெரியார் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநக ராட்சி உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் உதவி பொறியாளர் பழனி, திட்ட அலுவலர் கனி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் வீரன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தெருக்களில் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போதைப்பொருள் விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும்.
- இந்த நிகழ்ச்சியில் ஏட்டு காதர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இரு சக்கர வாகன பேரணி நடந்தது. அவனி யாபுரம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பேர ணியை போலீஸ் உதவி கமிஷனர் செல்வ குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம் பெரியார் சிலையில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி ரோடு, காமராஜர் நகர், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் வரை சென்றனர். மேலும் ஆங்காங்கே பொதுமக்க ளுக்கு போதை பொருட் களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீஸ் நிலையம் முன்புள்ள பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ- மாணவிகளுடன் போலீசார் இணைந்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்.
பின்னர் போலீஸ் உதவி கமிஷனர் செல்வகுமார் பேசுகையில், போதைப்பொருள் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது. இதில் மாண வர்கள் விழிப்பு ணர்வு டன் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே யாரேனும் போதைப் பொருள்களை விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தொலை பேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.
மேலும் வீட்டில் நமது பெற்றோர்களிடம் போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகளை எடுத்து ரைக்க வேண்டும். போதைப் பொருட்களால் குடும்ப முன்னேற்றம் தடைப்படும். மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய போதைப்பொருள். பெற்றோர்களுக்கு மாண வர்கள் இதுகுறித்து எடுத்து ரைக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏட்டு காதர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை-3 லட்சம் திருடிய மர்ம நபகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). அேத பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் கடைக்கு சென்று விட்டனர். இரவு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் துைண போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணம்-நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 முதியவர்கள் இறந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வர் அழகர்சாமி (வயது70). இவரது மனைவி ராம லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
இதனால் அழகர்சாமி மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கள்ளிக்குடியை அடுத்து ள்ள சோளம்பட்டியை சேர்ந்த வர் ராஜூ (62). இவரது மனைவி பாண்டி யம்மாள்.
இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜூ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
- மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.
- இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்
வாடிப்பட்டி
மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மந்தை திடலில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர்கள் கராத்தே சிவா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற் றார். இந்த முகாமில் கிருஷ்ணன் கோவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுவாதி தலைமையில் செவிலியர்கள் ராஜேஸ்வரி. சங்கரேஸ்வரி, தாமரைச்செல்வி, ஜெயராணி, ஜெயகர் ஆகியோர் 120 பேருக்கு கண் பரி சோதனை செய்தனர். அதில் 108 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.
இதில் நிர்வாகிகள் எம்.ஏ.முத்து, ராஜேந்திரன், கார்த்திகேயன், முத்துகாமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.
- மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் நிதி கிடைக்காததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
- நிதி, தேக்கம், Finance, stagnation,
வாடிப்பட்டி
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் நிதி வராததால் தொடர் பணிகள் தொடங்குவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 420 ஊராட்சி மன்றங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் பொதுமக்கள் கண்மாய், ஊரணி, கால் வாய் சீரமைப்பு பணி, மரக்கன்று நடும் பணிகள் செய்து வந்தனர்.
அதன்பின் தற்போது சிறு, குறுபாலம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணி, தடுப் பணை கட்டும் பணி, மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டும் பணி, சத்துணவு கூடங்கள், ஊட்டச்சத்து மைய கட்டிடங்கள் மரா மத்து பணி என்று தொடர்ச் சியாக பல பணிகள் செய்யப் பட்டு வருகிறது.
இந்த பணிகளுக்குரிய திட்ட மதிப்பீடுகளுக்கு ஏற்ற படி நிதிகள் கிடைக்க தாம தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி செய்த ஒப்பந்தக்காரர்கள் அடுத் தடுத்து தொடரும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்வதில் தேக்கம் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பணி களை விரைந்து முடிக்க அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






