என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடைபயணத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள்.
விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம்
- அலங்காநல்லூரில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள், ஆலை தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கவனஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கும் ேமற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.
அவர்கள் கோரிக்கை களை வலியு றுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணி செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்டி ருந்த போலீசார் பேரணிக்கு அனுமதி யில்லை. எனவே கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீ சாருக்கும், விவசாயி களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.






