என் மலர்tooltip icon

    மதுரை

    • பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது.
    • பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாசிட்டர் கார் (வாகன எண்.TN64G0159)பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன், பேன் கார்டு நகலுடன் காப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி நாளை (28-ந்தேதி) மாலை 6 மணிக்குள் பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    வாகனம் ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மதுரை மண்டல ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம், டி.என்.ஏ.யு. நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, திருமோகூர் சாலை, மதுரை என்ற முகவரியிலோ அல்லது 0452 2422517 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி. சங்கத்தின் பொருளாளர் தங்கையா தலைமை தாங்கினார்.

    எல்.பி.எப். சங்கம் இளங்கோ ,பி.எம்.எஸ். சங்கம் விஜயகுமார், சி.ஐ.டி.யு. துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். சங்க பீமராஜ், டி.யூ.சி.சி. சங்கம் வேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஜான், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மணிசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கனகசுந்தர், துணை பொதுச்செய லாளர் டி.கே. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து புறநகர் கிளையில் ஏற்க னவே கொடுத்து கொண்டு இருந்த பணி நேரத்தை குறைக்கக்கூடாது. அனைத்து பணி நேரங்க ளையும் பணி நேரமாக வழங்க வேண்டும். பணி குறைப்புக்கு வவுச்சராக வழங்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாம்பு கடித்து மாற்றுத்திறனாளி இறந்தார்.
    • பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் கொண்டுரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(வயது37), மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தபோது ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக காலில் கட்டு போட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பேரையூர் போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய குப்பை அள்ளும் வாகனங்களை தலைவர் தொடங்கி வைத்தார்.
    • மக்கும்-மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் 27 வார்டுகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் வீடு வீடாக சென்று மக்கும் -மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது. அவை குப்பை கிடங்கில் கொட்டப் பட்டு வருகின்றன.

    இது தவிர தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், ெரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் குப்பைகளை சேகரிப்ப தற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சேகரிக் கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக நவீன குப்பை அள்ளும் 3 வாகனங் கள் திருமங்கலம் நகராட்சி சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட் டன.

    இந்த வாகனங்களை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் நித்யா 3 புதிய வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்த னர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், சுகா தார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் மோதி முதியவர் பலியானார்.
    • விருதுநகர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகு வெள்ளைச்சாமி (வயது 60). இவர் ராஜபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் காவலாளி யாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் தனியாக வசித்து வந்த அழகு வெள்ளைச்சாமி இன்று காலை சிவரக்கோட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மதுரை- செங்கோட்டை ரெயில் மோதியதில் அழகு வெள்ளைச்சாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அழகு வெள்ளைச்சாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 8-ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து 9-ம் நாளில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. 10-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டி விழா நிறைவு பெற்றது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மதுரை பழங்காநத்தத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
    • கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கோகுலன். இவரது இரண்டு வயது மகன் பிரசின் தேவ். சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் சிறுவன் இருந்தார்.

    இந்த நிலையில் அவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    உடனடியாக பெற்றோர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பிரசின்தேவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை பிரசின்தேவ் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கோவில், வீட்டில் கொள்ளை நடந்தது.
    • ஆட்டோவை களவாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு–வில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி பிச்சை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களை கைது செய் தனர்.

    வீடு புகுந்து திருட்டு

    மதுரை தல்லாகுளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன் பானு (23). இவர் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்தி–ருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை திருடப்பட்டி–ருந்தது.

    இந்த சம்பவம் குறித்து ரோஷன் பானு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை திருப்பாலை உச்சபரம்பு மேடு ஜானகி அம்மாள் தெருவை சேர்ந்த–வர் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு மருத்துவம–னையை அடுத்த கேண்டீன் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.

    இவர் அருகில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆட்டோ திருடு போயி–ருந் தது. இதுகுறித்து முத்துப்பாண்டி அரசு மருத்து–வமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட் டோவை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இதில் பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (42), தத்தனேரி சிவ–காமி நகர் கணேஷ்குமார் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுரை திடீர் நகர் பகுதியில் கொலை திட்டத்திற்காக வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர்.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தே–கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களி–டம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொலை திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    யாரை கொலை செய்ய அவர்கள் பதுங்கி இருந்தார்கள், எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    • கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.

    மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.

    • திருமங்கலத்தில் இலவச பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் பிள்ளையாரிடம் மனு கொடுத்தனர்.
    • தாசில்தாரை காணவில்லை என கோஷம் எழுப்பினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்ரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் அந்தந்த தாலுகாக்களில் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்தநிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் 80-க்கும் மேற்பட்டோர் தங்கள் அனைவரும் தோப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதனால் அந்தந்த பகுதியில் வழங்காமல் கரடிக்கல் அல்லது தோப்பூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது வட்டாட்சியர் திருமங்கலம் தாலுகாவில் 13 பேருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கபடும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் வட்டாட்சியர் மாறுதலாகி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதை அறியாமல் இன்று தாலுகா அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததால் தாலுகா வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பார்வை யற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் குமார் தலைமையில் தாசில்தாரை காணவில்லை என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இந்த தடை உத்தரவு 9-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    மதுரை

    மதுரையில் வருகிற 9-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் அனுமதி இன்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக காவல்துறை சட்டம் 1888 -பிரிவு 41 மற்றும் 41(ஏ)- படி மதுரை மாநகர் பகுதிகளில் பொது,தனியார் இடங்களில் அனுமதி இன்றி கூடுதல், போராட்டத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களுடன் கூடுதல் மற்றும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலம் நடத்த வருகிற 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது

    அதன்படி நேற்று(25-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 15 நாட்கள் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்,ஊர்வலம் நடத்த விரும்புவர்கள் 5 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிய அனுமதியை பெற வேண்டும். அனுமதிவேண்டி கடிதம் கொடுக்கப் படும் நிலையில் போலீஸ் அனுமதி வழங்குவது குறித்து முடி வெடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×