என் மலர்
மதுரை
- முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வைத்தியநாதபுரம் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் மெயின் ரோட் டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் இன்பக் கொடி(வயது 37). இவருக்கு குடி பழக்கம் இருந்தது.
இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனால் மன உடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்பக் கொடியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மேனி ரோடு நேதாஜி தெருவை சேர்ந்த வர் சிவராமகிருஷ்ணன் (70). இவர் காளிமுத்து நகர் பொன்மேனி மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவர் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் கணபதி ராஜா எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சிவராம கிருஷ்ணனின் சாவுக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேளவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ஆயிஷா மரியம் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலை கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார்.
- அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார். அதன் பின்னர் சல்லக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த ஜீவிதாவுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 2 வாரங்களாக கணவர் சிவராஜ் குழந்தையை பார்க்க வராமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைக்கு கழுத்து பகுதியில் வேனல் கட்டிகள் இருந்து வந்ததால் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. ஜீவிதாவிடம் குழந்தை தாய்ப்பால் குடிக்காமலும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவிதா தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.
இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை துடித்தது. தொட்டிலில் படுத்திருந்த நிலையிலேயே குழந்தையின் கழுத்தை வெட்டியதால் தொட்டில் வேட்டியும் ரத்தமானது. ஆனால் ஜீவிதாவோ, இதனை மறைத்து குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வருவதாக கூறி உள்ளார்.
இதையடுத்து அவரது அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்து கட்டி பெரிதாகி அதன் மூலமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜீவிதா முதலில் தெரிவித்தார். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஜீவிதா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக தாய் ஜீவிதா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
8 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்த நிலையிலும் 2 வாரங்களாக கணவர் பார்க்க வரவில்லை. குழந்தையும் தாய்ப்பால் குடிக்காமல் இருந்தது. இதனால் புட்டிப்பால் மட்டுமே கொடுத்து வந்தேன். இதன் காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமானது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த நான் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
இவ்வாறு ஜீவிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
- சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)
கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.
- பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.
- ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள் தமிழக காவல்துறை என்ன செய்கிறது.
மதுரை:
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு. பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் தான். மாநிலத்திற்கு என்ன உரிமை உள்ளது. வரி... கல்வி எதுவுமே இல்லை.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது?
ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள். தமிழக காவல்துறை என்ன செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் மருமகள் தேவிக்கும் எற்கனவே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.
அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உறவினர்கள் சமரசம் பேசி தீர்த்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் இருதரப்பினரும் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதுதொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் மாமியார், மருமகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியது. அப்போது ஏற்பட்ட சண்டையை வழக்கம்போல் உறவினர்கள் விலக்கிவிட வந்தனர். இதில் மதுரை அருகே இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடப்பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகேயுள்ள மகாமுனி என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நள்ளிரவில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன.
இதேபோல் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டிலும், அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை சிலைமான் மற்றும் சிவகங்கை திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பிரசன்னா என்பது தெரியவந்தது. இருவரும் பெட்ரோல் குண்டுகளை தயாரித்து நள்ளிரவில் வந்து வீசியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இடப்பிரச்சினை மற்றும் டீக்கடையில் ஓசிக்கு சிகரெட் கேட்டு அதனால் ஏற்பட்ட தகராறிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்தது.
- மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்து துண்டாகி ரத்தம் கொட்டியது.
மதுரை:
மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே நேற்று மாலை கோச்சடை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பரிதி விக்னேஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் கோச்சடை முத்தையா கோவில் அருகே மின்கம்பம் ஒன்று பழுதாகி சேதமடைந்து இருந்தது. பழுதான அந்த மின்கம்பத்தை மின்சார வாரியத்தினர் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது கட்டுக்கம்பிகளை மின்கம்பத்தில் கட்டி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்தது. அதேநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்தது.
இதில் மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்து துண்டாகி ரத்தம் கொட்டியது. இதனால் துடிதுடிக்க அந்தப் பகுதியில் கீழே விழுந்த மாணவன் விக்னேஸ்வரனை சக நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்கம்பம் மாற்றும் பணியின் போது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு உபகரணங்களும் எதையும் பின்பற்றாமல் மிகவும் அஜாக்கிரதையாகவும், அலட்சியமாகவும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளால் தான் விக்னேஸ்வரனின் கணுக்கால் பகுதியை இழந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான தேசிய போட்டியில் கலந்துகொள்ள தன்னை தயார்படுத்தி வந்த மாணவர் பரிதி விக்னேஸ்வரன், மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது அவரது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருப்பதாக மாணவனின் நண்பர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் தாய் கூறுகையில், 3 டன் எடை கொண்ட மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரியத்தினர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததே எனது மகனின் கால் துண்டாக காரணமாகும். போதிய வருவாய் இன்றி தவித்து வரும் எனது குடும்பத்தை காப்பாற்ற பலத்த காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் கம்பம் மாற்றும் பணியில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்படி தான் நடந்தது. ஆனால் மாணவரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது என்றார்.
இந்நிலையில் மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது அலட்சியமாக எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்புமின்றி பணிகள் மேற்கொண்ட கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடைபயணத்தின் போது புள்ளி விபரங்களுடன் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும்.
- அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.
மதுரை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நாளை ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்குகிறேன். இங்கு தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் முதல் பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறேன்.
அதன்படி முதல் தொகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்கிறேன். அப்போது மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூற இருக்கிறேன்.
இந்த நடைபயணத்தின் போது புள்ளி விபரங்களுடன் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும். தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு தொடங்கிவைக்க இருக்கிறார். வரும் நாட்களில் நடைபெறும் தொடர் நடைபயணத்தின்போது பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மேலும் நடைபயணத்தின் இடையே 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் அதிக பயனாளர்கள் என்ற அடிப்படையில் அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று கூறுவது முதலமைச்சருக்கு அழகு கிடையாது. ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜரானார்.
- கிரா–னைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூ–ரில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குவாரிகளில் முறை–யீடு நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு–கள் பதிவு செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலான கிரானைட் வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஒரு சில வழக்குகள் இன்னும் மேலூர் கோர்ட்டிலேயே நடந்து வருகிறது. அதில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி தொடர் பான கிரானைட் வழக்கு மேலூர் கோட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது துரை தயாநிதி தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல கிருஷ்ணன், கிரானைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
- மொபட்டில் சென்ற முதியவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூர் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது74). இவர் புது நத்தம் ரோட்டில் பாலத்தின் கீழே மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை யோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் அருகே மொபட் வந்தபோது டிரைவர் சிக்னல் எதுவும் செய்யாமல் திடீரென கதவை திறந்தார். இதனால் மொபட் எதிர் பாராத விதமாக கார் கதவு மீது மோதியது. இதனால் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து முருகனின் மகன் செந்தில் குமார் போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் நின்றிருந்த கார் டிரைவர் உத்தங்குடி லேக் ஏரியாவை சேர்ந்த சுதர்சன் (43), மற்றொரு கார் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு புகுந்து நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை சிந்தாமணி புதுத்தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி (வயது26). மணிகண்டன் குடும்பத்து டன் வெளியூர் சென்றி ருந்தார். இதனால் தனது வீட்டின் கதவை பூட்டி மகாலட்சுமியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்தி ருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து கீரைத்துறை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாலட்சுமி வீட்டின் கதவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
உசிலம்பட்டி குருவக் குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் அஜய் என்ற ரோகித் (21). இவர் மதுரை ஆரப்பாளை யம் மெயின் ரோட்டில் கார்ப்பரேசன் காலனி தெரு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசில் அஜய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலி பர்களை தேடி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
- ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.
ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.
எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்
எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.
எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்தலிப்பு (வயது60). கடந்த வருடம் இவரது மகன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார். அன்றிலிருந்து மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து தற்காலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தலிபு பரிதா பமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி பானு செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேடு மோதிலால் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜா (36). இவர் மனை வியுடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜாவின் சகோதரி ஈஸ்வரி, கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






