என் மலர்
மதுரை
- என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது.
- அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியது கண்டனத்திற்குரியது.
மதுரை:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட் நிலத்தில் முதற்கட்ட பணியை என்எல்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய சூழலில் என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். அப்போது தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும்.
எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டபிறகும் சிலர் நிலத்தை வழங்காமல் உள்ளனர். திடீரென இந்த முடிவை நிர்வாகம் எடுக்கவில்லை. விவசாயிகளிடம் ஏற்கனவே டிசம்பர் மாதத்திறகு பிறகு நிலத்தில் பயிர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிர்களை சாகுபடி செய்தனர்.
அறவழியில் போராடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை கோகிலா சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெயவெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், இந்திய மருத்துவ நல அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச விழித்திரை பரிசோதனை முகாமை நாளை (சனிக்கிழமை) நடத்த ஏற்பாடு செய்துள்ளது. கோகிலா சித்த மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாம் காலை 9 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கும். டாக்டர்கள் ஜெயவெங்கடேஷ், பவித்ரா, சுபலெட்சுமி, பிரியங்கா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனர். ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு பார்வை திறன் குறைபாடு, கண் நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கு பெற விரும்புவோர் நிர்வாக அலுவலர் செந்தில்நாதனை 90030 00251 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கோகிலா சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெயவெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
- அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை நடந்தது.
- கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சாத்தங்குடியைச் சேர்ந்த பாண்டி(வயது 57) பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி சன்னதியின் கதவை உடைத்து உள்ளே இருந்த பாரம்பரியான மரப் பெட் டியில் வைக்கப்பட்டிருந்த 6 பித்தளை மணி, பூர்ண கலா கவசம், அய்யனார் சாமி கவசம் மற்றும் பூஜை பொரு ட்களை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 21 ஆயிரம் ஆகும்.
மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி சன்னதி கதவு உடைக்கப்பட்டு பொ ருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட் டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் விருதுநகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் .
சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
கள்ளிக்குடி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38). லோடு மேனான இவர் வில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வந்த இவரை 3 பேர் மிரட்டி ரூ. ஆயிரம் பறித்து சென்றனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த கிஷோர், பிரவீன் குமார், மாரீஸ்வரன் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நகை -பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங் களில் ஈடுபட்டிருக்கலாம் என ெதரிகிறது. இதன் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.
- தொட்டி பாலத்தின் அருகில் கல்குவாரிகள் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
- தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வரும் பிரதான கால்வாயில் திண்டுக்கல் மாவட்டம் மேல அச்சணம்பட்டி பகுதியில் தாழ்வான பகுதியை இணைக்க 1,400 கி.மீ., நீளத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரீட் தூண்கள் அதிக பட்ச உயரமாக 68 அடி உயரமும் எழுப்பி தொட்டி ப ாலம் அமைத்துள்ளனர். 20 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு பெற்று கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 35 கண்மாய்கள் பாசனம் பெறும். இந்த நிலையில் இந்த பாலத்தின் அருகில் கல் குவாரி, ஜல்லி உடைக்கும் கிரசர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடியினால் பாலத்தில் விரிசல் ஏற்படுவதாகவும், தூண்கள் சேதமடைவதாகவும், இதனால் கல்குவாரிக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 58 கிராம பாசன சங்க விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தொட்டி பாலத்தினை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., பி.வி கதிரவன் பார்வையிட்டார்.
58 கிராம பாசன விவசாயி கள் சங்க நிர்வாகி கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் அ.இ.பார்வர்ட் பிளாக் மாநில நிர்வாகிகள் பாஸ்கர பாண்டியன் ஐ.ராஜா மாவட்ட தலைவர் ஆதிசேடன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன் ஆச்சி ராஜா சபரி விவசாய அணி எவரெஸ்ட் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.பாலத்தின் இணைப்பு பகுதிகளில் வெடி வைப்பதால் ஏற்படும் விரிசல், பாலத்தின் தூண்களின் இடையே கனரக வாகனங்கள் செல்வதால் தூண்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடியாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் இந்த குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இந்த தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
- மரக்கன்று நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை யங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் சோபிதா முன்னிலை வகித்தனர். மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் பறை இசையுடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
- ஆடி பதினெட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள், யாரை வழிபடலாம்?
- பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.
மதுரை
பொதுவாக ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.மேலும், ஆடி மாதங்களில் சுப காரியங்கள் செய்ய சற்று யோசிப்பார்கள். ஆனால், ஆடி 18 அன்று பதி னெட்டாம் பெருக்கு என்ப தால் அனைத்து சுபகாரியங் களையும் தாராளமாக செய் வார்கள். ஆடி 18 அன்று என்ன செய்தாலும் பல மடங் காக பெருகும் என்பது காலம் காலமாக, நம்பிக் கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆடி 18 அன்று எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் செல்வ வளம் கூடும் என்று பிரபல ஜோதிடர் மதுரை -மடப் புரம் விலக்கு கரு. கருப்பை யா விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக அனைத்து ராசிக் காரர்களும் குலதெய் வத்தை வழிபட்டு வருவது கூடுதல் பலன் கொடுக்கு மாம்.
குறிப்பாக மேஷம் ராசிக் காரர்கள் முருகனையும், ரிஷபம் ராசிக்காரர்கள் சிவ பெருமானையும், மிதுனம் ராசிக்காரர்கள் பெரு மாளையும், கடகம் ராசிக்கா ரர்கள் கால பைரவரையும், சிம்மம் ராசிக்காரர்கள் காளியம்மனையும், கன்னி ராசிக்காரர்கள் சக்கரத் தாழ்வாரையும், துலாம் ராசிக்காரர்கள் ஜீவ சமாதி களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் முருகப்பெரு மானையும், தனுசு ராசிக் காரர்கள் அனுமனையும், மகரம் ராசிக்காரர்கள் மகா லட்சுமியையும், கும்பம் ராசிக்காரர்கள் தெற்குமுக விநாயகப் பெருமானையும், மீனம் ராசிக்காரர்கள் நவக் கிரகங்களில் உள்ள குரு பகவானையும், வாச முள்ள மலர்கள் சாற்றி வழிபட்டு வந்தால் செல்வ வளம் கூடுமாம்.
இவ்வாறு பிரபல ஜோதிடர் திருப்புவனம் கரு. கருப்பையா கூறியுள்ளார்.
- பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.
அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
- சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலியானார்.
- விபத்துகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் மறவ மங்கலம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் பிரதீப் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். 4 வழிச்சாலை மெட்டல் பவுடர் கம்பெனி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்து குறித்து அப்பகுதி யினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் 20 நிமிடம் வரை உயிருக்கு போராடிய பிரதீப் பரிதாபமாக இறந்தார். விபத்துகுறித்து திருமங்க லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.
இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
- அதன்பேரில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை
மதுரை செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனி வேல் மகன் பூபதி ராகவேந்தி ரன். இவர் வழிப்பறி உள் பட்ட பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தார். இதனால் இவருடைய குற்ற செயல் களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் உத்தரவின்பேரில் போலீசார் பூபதி ராகவேந்தி ரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் பார்த்தசாரதி 21. இவர் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஈடு பட்டு வந்தார். தொடர்ந்து இவர் இந்தச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை யும் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
பி.டி.ஆர். மெயின் ரோடு இந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் என்ற குட்டீஸ். இவர் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் .மதுரையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
- அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- இதனால் அம்மன் கோவில்கள் திரு விழா கோலமாக காட்சியளித்தன.

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பெண்கள்.
மதுரை
தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாட ப்படுவது வழக்கம். பக்தர்க ளுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும்.
அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இன்று ஆடி 2-வது வெள்ளிக்கிக்கிழமையை யொட்டி மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு பூஜை கள் தீபாராதனை நடந்தது.
மேலும் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில், அழகர்கோவில், நூபுர கங்கை, ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜெகனை மாரியம்மன் கோவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் திரளான பெண்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்கள் திரு விழா கோலமாக காட்சி யளித்தன.






