குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
Published on

மதுரை

மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.

இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com