சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலி

சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலியானார். விபத்துகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் மறவ மங்கலம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் பிரதீப் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். 4 வழிச்சாலை மெட்டல் பவுடர் கம்பெனி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்து குறித்து அப்பகுதி யினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் 20 நிமிடம் வரை உயிருக்கு போராடிய பிரதீப் பரிதாபமாக இறந்தார். விபத்துகுறித்து திருமங்க லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com