வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது

மதுரை திடீர் நகர் பகுதியில் கொலை திட்டத்திற்காக வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர்.
வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை திடீர் நகர் போலீசார் இரவில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டி–ருந்தனர். அவர்கள் வக்கீல் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது சந்தே–கத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட வாலிபர்களி–டம் போலீசார் நடத்திய விசாரணையில் ஹீரா நகர் காளிமுத்து மகன் மூர்த்தி (38), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி (23) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொலை திட்டத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

யாரை கொலை செய்ய அவர்கள் பதுங்கி இருந்தார்கள், எதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com