என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • நாவப்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர்.
    • கொலை மிரட்டல்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை (வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை, முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த கிராம நிர்வாக அலுவலர் நாவப்பிளையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆவின் பாலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
    • ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்மு தல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வரு வாய் ஈட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும்,18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக இணையதள முகவரி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என இதில் அவர் இவ்வாறு கூறினார்.

    • அனுநிரோஷா தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டைகூட்டுரோட்டை சேர்ந்தவர் தோமாஸ் மகள் அனுநிரோஷா (வயது17). இவர் தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அரசு பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அனுநிரோஷா தனது பெரியப்பா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின் இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக லலிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
    • 3 பேரும் என்னை போனில் தினமும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகனந்தல் அக்கராய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா (வயது 22), இவருக்கும் திருக்கோவிலூர் அருகே பாடியந்தல் கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக லலிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் லலிதா அவரது தாய் சரஸ்வதியுடன் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கு எதிரே நின்று கொண்டு தனது மகனை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி கதறி அழுதார்.

    இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து அவரை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து லலிதா மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் எனக்கும் முருகன் என்பவருக்கும் கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு அஸ்வின் என்ற வயது 3 ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் 20-ந்தேதி மாலை நான் எனது தாய் வீட்டில், நான் இருக்கும் போது எனது கணவர் முருகன் வீட்டில் அத்துமீறி நுழைந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து என்னிடம் இருந்த எனது குழந்தையை பறித்துக்கொண்டு சென்று விட்டார்.

    இது சம்மந்தமாக நான் எனது கணவரின் வீட்டிற்கு சென்று குழந்தையை தருமாறு கேட்டேன். அதற்கு எனது கணவர் முருகன் அவரது தாய் செல்வி, சித்தி விசாலாட்சி ஆகியோர் ஒன்று கூடி, என்னை திட்டி அடித்து குழந்தையை திரும்ப கொடுக்கமுடியாது என்று சொல்லி அங்கிருந்து துரத்திவிட்டனர். இது சம்மந்தமாக நான் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த 3 பேரும் என்னை போனில் தினமும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுகிறார்கள். எனவே, தாங்கள் இதில் தலையிட்டு எனது குழந்தையை என்னிடம் மீட்டு கொடுக்க வேண்டும். எனது கணவர், அவரது உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது பெண் ஒருவர் தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என கூட்டரங்கு எதிரே கதறிய சம்பவம் அங்கே இருந்த பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மனோன்மணிக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது.
    • மனோன்மணி எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாபுரம் கிராமத்தை சேர்ந்த மனோன்மணி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 21). இவர்களுக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது. இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி கடந்த 17-ந்தேதி கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா சென்றார்.

    அவரது செல்போனுக்கு மனோன்மணி தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யாவின் தாயை தொடர்பு கொண்டு கேட்டபோது பொழுது ஐஸ்வர்யா வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது38), பாச்சேரியை சேர்ந்த சக்தி (29) ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • பழனியம்மாள் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38)இவரது மனைவி ஜீவா (வயது 32). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் ஜீவா வீட்டின் கதவை உடைத்து ஜீவா வை கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 7பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    பின்னர் அதே தெருவில் வசிக்கும் பழனியம்மாள் (வயது 65) வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். எராவூர் அருகில் உள்ள மேலூர் பஸ் நிறுத்தம் அருகே தனியாக வசிக்கும் பூபதி (வயது 60) வீட்டில் நேற்று நள்ளிரவில் 2 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். வீடடில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் பூபதியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 34). இவர் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார். இதையடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்ட்டி வைக்க முடிவு செய்து, புதுவைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினார். அதனை ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினார். இவர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் கோவிந்தசாமி பதட்டமாக அங்கிருந்து வேகமாக நடந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்து பையை சோதனையிட்டனர். அதில் இருந்து புதுவை மதுபானங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோல உளுந்தூ ர்பேட்டை கார்நேசன் வீதியைச் சேர்ந்த சாந்தா (60), மணலூர் சத்தியராஜ் (29) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம், மதுபானம், கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார்.
    • துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி மற்றும் பீளமேடு ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. பல்லகச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்கள் வழங்கும் அடிப்படை கோரிக்கைகள், நீண்டகால கோரிக்கைகளில் நிவர்த்தி செய்ய முடியும் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மேலும் நிவர்த்தி செய்ய முடியாத மனுக்கள் குறித்த காரணங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

    மேலும் இதனைத் தொடர்ந்து பீளமேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்களைத் தேடி மனுக்கள் பெரும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 353 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் செல்வநாயகம், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையும், ஊர்கள் தோறும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறி கண்டன உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சர்தார் சிங், மாவட்ட செயலாளர் மில் ஹரி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • சினேகா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
    • இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 22) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.கல்யாணம் ஆனமுதலே கணவன் -மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று வீட்டில் இருந்த சினேகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் நேற்று கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சினேகாவின் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×