என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- சின்னசேலம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- சின்னசாமி பையில் வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாயை தொலைத்து விட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34 )இவருடைய தந்தை சின்னசாமி (வயது 47) இவர் கூலி வேலை செய்து வந்தார். சின்னசாமி கடந்த 23-ந் தேதி அவரது பையில் வைத்திருந்த 8ஆயிரம் ரூபாயை தொலைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனை மனைவி ,மகன் மணிகண்டன் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னசாமி விஷம் குடித்தார்.
அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளி க்காமல் சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னசாமி மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.