search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு தாட்கோ மூலம் கடனுதவி மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சியில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு தாட்கோ மூலம் கடனுதவி மாவட்ட கலெக்டர் தகவல்

    • ஆவின் பாலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
    • ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்மு தல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வரு வாய் ஈட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும்,18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக இணையதள முகவரி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என இதில் அவர் இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×