சங்கராபுரம் அருகே ஆஸ்பத்திரிகளில் நூதன முறையில் செல்போன்கள் திருடிய வாலிபர்

ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். போலீசார் செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே ஆஸ்பத்திரிகளில் நூதன முறையில் செல்போன்கள் திருடிய வாலிபர்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் 2 ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் பணியில் இருந்த 2 நர்சிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com