என் மலர்
காஞ்சிபுரம்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் 4-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும் மத்திய அரசின் பல்லாயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கூட்டணி குறித்து தே.மு.தி.க. இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வாரா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். இதற்கான அழைப்பை அ.தி.மு.க. தான் கொடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் ரூ.6 ஆயிரம் தேர்தலுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார். கொடுத்தும் வாங்கியும் பழக்கப்பட்டவர்களுக்கு அதுதான் நினைவுக்கு வரும்.
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். தி.மு.க.வில் மத்திய மந்திரியாக இருந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உள்ளார்களா?
தமிழக பிரச்சனையை மத்திய அரசுக்கு எடுத்து சென்று தீர்வு கண்டு உள்ளார்களா? அவர்கள் தமிழகத்துக்கு எதுவும் செய்யாதவர்கள். பதவி சுகத்தை அனுபவித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #PChidambaram
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர், புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). கட்டிட தொழிலாளி.
நேற்று மாலை மது போதையில் இருந்த ராமதாஸ் அதே பகுதி இந்திரா காந்தி பிரதான சாலை ஓரத்தில் விழுந்தார். பின்னர் அங்கேயே தூங்கி விட்டார்.
இந்த நிலையில் அவ்வழியே சென்ற கார் திடீரென சாலையோரத்தில் கிடந்த ராமதாஸ் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை சிகிச்சை பலனின்றி ராமதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஜெரால்டு பென்ஜமின் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை, மார்ச்.5-
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய 3 தொகுதி களில் 2 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் பட்டியல் கொடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது உறுதியாகி விட்டது. திருமா வளவன் போட்டியிடுவதற் காக இந்த தொகுதி ஒதுக்கப் படுகிறது.
இன்னொரு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் போட்டியிடு வதற்காக விழுப்புரம் அல்லது காஞ்சீபுரம் தொகுதியை தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் விழுப்புரம் தொகுதியில் வன்னியர்கள் செல்வாக்கு உள்ளதால் இங்கு தி.மு.க. வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்று மு.க. ஸ்டாலினிடம் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளதால் விழுப்புரம் தொகுதியை தி.மு.க. வைத்துக் கொள்ள விரும்புகிறது.
இந்த நிலையில் விழுப் புரம் தொகுதி கிடைக்கா விட்டால் காஞ்சீபுரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தருமாறு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் இந்த முறை திருவள்ளூர் தொகுதிக்கு பதில் காஞ்சீ புரம் தொகுதியை தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அங்கு ரவிக்குமார் போட்டியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித் தனர்.
சென்னை:
தென்மாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வழியாக சென்னை மாநகருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் பெருங்களத்தூரில் இருந்து திருச்சி செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வண்டலூர் சந்திப்பில் ரூ.55 கோடி செலவில் உயர்நிலை மேம்பாலம் கட்டப்படுகிறது. வண்டலூர்-கேளம்பாக்கம் சந்திப்பில் ஜி.எஸ்.டி. சாலை யில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
6 வழிப்பாதையுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 711 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பால கட்டுமான பணி கடந்த ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் பிரச்சினை, மணல் கிடைக்காமை, சிமெண்ட் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலம் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வண்ட லூர் பாலத்தின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) முடிவடையும் என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது பாலத்தின் சுற்றுச் சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பால பகுதியில் புதிய டிராபிக் சிக்னலும் அமைக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் பாலத்தின் வலதுபுறம் திரும்பி கீழே இறங்கி செல்ல வேண்டும்.
தற்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடத்துக்கும் மேல் இந்த பகுதியில் காத்திற்க வேண்டி உள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் அனைத்து வாகனங்களும் விரைவில் செல்ல முடியும்.
ஆலந்தூர்:
சென்னை கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கணவரை இழந்த 2 மகள்களுடன் வசித்து வந்தார். இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்து இவரது மகள்களில் ஒருவருக்கும், கிண்டி மசூதி காலனியை சேர்ந்த வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நின்று போனது.
கடந்த ஓராண்டுக்கு முன்னரே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அதன் பின்னர் வினோத்தின் நடவடிக்கைகள் சரி இல்லை என்று கூறி தாய் ரேவதி தான் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதன்பின்னர் வினோத் பலமுறை கேட்டுப்பார்த்தும் ரேவதி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே வினோத் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரேவதியை வெட்டிக் கொலை செய்தார்.
இதுபற்றி கிண்டி உதவி கமிஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ரேவதியை கொலை செய்த வினோத் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-
ரேவதியின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் நாங்கள் இருவரும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இதனால் ரேவதியின் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். திருமணத்தை நிறுத்திய பின்னர் நான் பலமுறை ரேவதியை சந்தித்து மகளுடன் சேர்த்து வைக்குமாறு கூறினேன்.
ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை நான் அடிக்கடி சந்தித்து பேசி வந்தேன்.
இதுபற்றி அறிந்ததும் ரேவதி மகளை விடுதியில் சேர்த்து விட்டார். இதனால் என்னால் அந்த பெண்ணை பார்க்க கூட முடியாமல் போய்விட்டது.
இதுபற்றி கடந்த வாரம் நேரில் சந்தித்து கேட்டேன். அப்போது ரேவதி, இனி, என் மகளை நீ பார்க்கவே கூடாது என்று வறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கொல்லாமல் விட மாட்டேன் என்று ரேவதியை எச்சரித்தேன். ஆனால் அவர் மனம் மாறவில்லை. இதனாலேயே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன்.
இவ்வாறு வினோத் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்கிறார்கள்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை போர் விமானம் மூலம் குண்டு வீசி அழித்தது. நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டியடித்தபோது சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வான்வழி, கடல்வழி, தரைவழி பாதுகாப்புகளை நவீன ரேடார் கருவிகள், கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.
அணுமின் நிலையத்துக்குள் பணிக்கு செல்லும் அனைத்து வடமாநில ஊழியர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஒப்பந்த பணிக்கு வருவோர் அனைவரும் அவரவர் குடியிருக்கும் பகுதி காவல் நிலையத்தில் நன்னடத்தை சான்று வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரியம் பகுதியில் குடியிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி முகாம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து ஊழியர்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.
தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தாம்பரத்தில் உள்ள அபினந்தன் வீட்டில் அவரது தந்தை வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். வரதமான் ஓய்வு பெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் ஆவார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அபினந்தன் வீட்டுக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் 1942-ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக விமானப்படை பிரிவில் நாட்டுக்காக சேவை செய்து வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன்.
தங்கள் மகன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்திப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைவதாக கூறினார்கள். இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
அதேநேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப தே.மு.தி.க. சார்பில் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார். ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. சார்பிலும் மு.க.ஸ்டாலின் சார்பிலும் அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். அபினந்தன் வீரதீர செயல் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஜெனிவா ஒப்பந்தம் 13-வது பிரிவின்படி துன்புறுத்தாமல் நடத்தப்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தைரியமாக உள்ளனர். அவர்கள் தான் நமக்கு தைரியம் சொல்கிறார்கள். அபினந்தன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அரசாணிமங்கலம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோழிப் பண்ணைக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெட்டி பெட்டியாக போலி மதுபானங்கள் அடங்கிய பாட்டில்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
போலி மதுபானங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட கோழிப் பண்ணை உரிமையாளர் காசி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சண்முகவேல், பழனி, கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அங்கிருந்த 40 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1,250 லிட்டர் எரிசாராயம் மற்றும் 4 கார்களை பறிமுதல் செய்தனர்.
இங்கு தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது
இதில் வேறு யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு சகோதரி உள்ளார். அபினந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதால் மாடம்பாக்கம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.
அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முக்கியமானவர்களை தவிர பொதுமக்கள், செய்தியாளர்கள் என யாரையும் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.
அபினந்தனின் பெற்றோரை சந்திக்க வந்த அவரது உறவினர் குந்தநாதன் கூறியதாவது:-
வரதமான் என்னுடைய மாமா. அவரது மகன் தான் அபினந்தன். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணாமுர். தற்போது மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபினந்தனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
அபினந்தன் குடும்பத்துடன் டெல்லியில் தான் வசித்து வந்தார். அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கையையே மற்ற உறவினர்களும் வலியுறுத்தினர்.
பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் அபினந்தன் பெற்றோரை சந்தித்து பேசினர். மேலும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அபினந்தன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றனர். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் அவர்களை சந்தித்தார்.
அபினந்தனின் பெற்றோர் டெல்லி புறப்பட்டு செல்வார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அபினந்தன் பெற்றோர் வசிக்கும் குடியிருப்பில் கதவுகள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Abhinandan
தாம்பரம்:
குரோம்பேட்டை நியூ காலனி, 12-வது தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர் பிருந்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மர்ம வாலிபர் வீட்டின் கதவை தட்டினான். பிருந்தா கதவை திறந்ததும் அவன் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்தான். பின்னர் பிருந்தாவை கட்டிபோட்டு வாயில் துணியை திணித்தான்.
மேலும் பிருந்தா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மீட்டனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.






