என் மலர்
நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் மதுபானம்"
காஞ்சிபுரம் அருகே போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 40 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1,250 லிட்டர் எரிசாராயம் மற்றும் 4 கார்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அரசாணிமங்கலம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோழிப் பண்ணைக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெட்டி பெட்டியாக போலி மதுபானங்கள் அடங்கிய பாட்டில்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
போலி மதுபானங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட கோழிப் பண்ணை உரிமையாளர் காசி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சண்முகவேல், பழனி, கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அங்கிருந்த 40 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1,250 லிட்டர் எரிசாராயம் மற்றும் 4 கார்களை பறிமுதல் செய்தனர்.
இங்கு தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது
இதில் வேறு யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.