என் மலர்
ஈரோடு
ஈரோடு:
திருச்சி துவாக்குடி அருகே கர்ப்பிணி பெண் உஷா தனது கணவர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது வாகன சோத னையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை நிறுத்தினார்.
ஏன் ஹெல்மெட் அணிய வில்லை? என இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு ஆஸ்பத்திரி செல்லும் அவசரத்தில் வந்து விட்டோம் என்று ராஜா கூறி விட்டு புறப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த வண்டியை துரத்தி காலால் எட்டி உதைத்தார். இதில் மோட்டார் சைக் கிளுடன் கணவர்- மனைவியும் கீழே விழுந்தனர். இதில் மனைவி உஷாவின் தலையில் பலத்த அடிப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
தமிழகம் முழுவதும் பேரதிர்வையும், அதிர்ச்சியையும் இந்த கொடூர சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஈரோடு மாவட்ட சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.
வாகனத்தை நிறுத்த சொல்லும் போது அவர்கள் தெரிந்தோ... தெரியாமலோ நிற்காமல் போய் விட்டால் அவர்களை துரத்தக்கூடாது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து கொண்டு பிறகு விசாரிக்க வேண்டும்.
மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கடுமையாகவோ, கோபமாகவோ நடக்க கூடாது. மென்மையை கடைப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறி உள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைத்தெறியப்படும் நாள் விரைவில் வரும் என தெரிவித்ததையடுத்து எச்.ராஜாவிற்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன்பு சத்தி-மைசூர் ரோட்டில் ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதோடு எச்.ராஜாவை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. #tamilnews
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எச். ராஜாவை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எச். ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து எச். ராஜாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் இன்று அதிகாலை பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையொட்டி பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல ஈரோடு கச்சேரி வீதியில் அண்ணா மற்றும் பெரியார் நினைவகம் உள்ளது. அங்கு இன்று 2-வது நாளாக ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோபி பெரியார் திடல் முன்புறம் உள்ள பெரியார் சிலைக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் அந்தந்த பகுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
ஈரோடு, மார்ச். 7-
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக்கில் (முகநூலில்) பெரியார் சிலை உடைக்கப்படும் என தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்சி சார்பில் அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க.வினரும் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென எச்.ராஜா உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்.
அப்போது எச்.ராஜாவை கண்டித்து கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்.. எச்.ராஜாவை கண்டிக்கிறோம்.., கைது செய்.. கைது செய்.. எச்.ராஜாவை கைது செய்.. சிறையில் போடு.. சிறையில் போடு... எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் போடு போன்ற கோஷங்களை முழங்கினர்.
முன்னதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தி.மு.க. சார்பில் எச்.ராஜாவை கைது செய்யக் கோரி ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுக்கப் பட்டது. * * * ஈரோட்டில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்ட காட்சி.
ஈரோடு:
கொங்கு மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சி தலைமை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்கட்சி கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் அவ்வபோது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் கருத்துகளை கேட்டறிந்தார். அவர்ளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
இந்நிலையில் ஈரோடு ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு நல்லி மஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார்.மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது.-
மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.செயல் ஆற்றல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் இப்போதே தங்களை பணியை செய்ய தொடங்கினால் நாம் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார்.#tamilnews
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள குமிலன்பரப்பு, அம்மன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 43). இவர் குமிலன்பரப்பில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடையில் ஈரோடு, சூளை, மல்லிகைநகரை சேர்ந்த வடிவேலு (21) ஊழியராக வேலை பார்த்தார்.
கருப்புசாமியிடம் வடிவேலு ரூ.80 ஆயிரம் பணம் வாங்கி இருந்தார். பணத்தை தருமாறு கருப்புசாமி கேட்டு வந்தார். ஆனால் வடிவேலு கொடுக்கவில்லை.
சரியாக வேலைக்கு வராமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பகலில் பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமி ரூ.80 ஆயிரம் பணத்தை தருமாறு கேட்டார்.
அப்போது தான் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியை கருப்புசாமியிடம் கொடுத்த வடிவேலு, ‘‘பைக்கை வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கொடுத் துவிட்டு பைக் சாவியை வாங்கிக்கொள்கிறேன்‘‘ என்று கூறினார்.
பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு 9 மணிக்கு பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமியிடம் ரூ.75 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
‘‘மீதி ரூ.5 ஆயிரம் பணத்தை 2 பேர் கொண்டு வருவார்கள். அவர்கள் வந்ததும் பணத்தை கொடுத்து விட்டு பைக்கை பெற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி விட்டு அங்கு நின்றார்.
நள்ளிரவு வரை யாரும் அங்கு வரவில்லை. பேக்கரி மூடப்பட்டது. ஊழியர்கள் பேக்கரிக்கு வெளியே படுத்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்களும், வடிவேலும் பேக்கரிக்குள் சென்று கருப்புசாமியிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
வடிவேலு உள்பட 3 பேரும் சேர்ந்து கருப்புசாமியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 6 இடங்களில் கருப்புசாமிக்கு பலமான குத்து விழுந்தது.
இதில் கருப்புசாமி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து வடிவேலு உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
பேக்கரிக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென ஓடுவதை பார்த்து வெளியே படுத்திருந்த ஊழியர்கள் சந்தேகித்தனர். எனவே விரைவாக எழுந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கருப்புசாமி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கருப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்தாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலு தனது மனைவி மற்றும் 1½ வயது குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி செல்லும் நோக்கத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது.
எனவே போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த நேரத்தில் கொலையில் ஈடுபட்ட வடிவேலுவின் கூட்டாளிகள் 2 பேரும் அங்கு வந்ததாகவும், அவர்களையும் போலீசார் பிடித்ததாகவும் தெரிகிறது.
இந்த கொலை சம்பவம் பவானி, சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள குமிலன்பரப்பு, அம்மன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 43). இவர் குமிலன்பரப்பில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடையில் ஈரோடு, சூளை, மல்லிகைநகரை சேர்ந்த வடிவேலு (21) ஊழியராக வேலை பார்த்தார்.
கருப்புசாமியிடம் வடிவேலு ரூ.80 ஆயிரம் பணம் வாங்கி இருந்தார். பணத்தை தருமாறு கருப்புசாமி கேட்டு வந்தார். ஆனால் வடிவேலு கொடுக்கவில்லை.
சரியாக வேலைக்கு வராமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பகலில் பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமி ரூ.80 ஆயிரம் பணத்தை தருமாறு கேட்டார்.
அப்போது தான் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியை கருப்புசாமியிடம் கொடுத்த வடிவேலு, ‘‘பைக்கை வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கொடுத்துவிட்டு பைக் சாவியை வாங்கிக்கொள்கிறேன்‘‘ என்று கூறினார்.
பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு 9 மணிக்கு பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமியிடம் ரூ.75 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
‘‘மீதி ரூ.5 ஆயிரம் பணத்தை 2 பேர் கொண்டு வருவார்கள். அவர்கள் வந்ததும் பணத்தை கொடுத்து விட்டு பைக்கை பெற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி விட்டு அங்கு நின்றார்.
நள்ளிரவு வரை யாரும் அங்கு வரவில்லை. பேக்கரி மூடப்பட்டது. ஊழியர்கள் பேக்கரிக்கு வெளியே படுத்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்களும், வடிவேலும் பேக்கரிக்குள் சென்று கருப்புசாமியிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
வடிவேலு உள்பட 3 பேரும் சேர்ந்து கருப்புசாமியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 6 இடங்களில் கருப்புசாமிக்கு பலமான குத்து விழுந்தது.
இதில் கருப்புசாமி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து வடி வேலு உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
பேக்கரிக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீ ரென ஓடுவதை பார்த்து வெளியே படுத்திருந்த ஊழியர்கள் சந்தேகித்தனர். எனவே விரைவாக எழுந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கருப்புசாமி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம் புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கருப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட் டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலு தனது மனைவி மற்றும் 1½ வயது குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி செல்லும் நோக்கத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் நிற்பது போலீ சாருக்கு தெரியவந்தது.
எனவே போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த நேரத்தில் கொலையில் ஈடுபட்ட வடிவேலுவின் கூட்டாளிகள் 2 பேரும் அங்கு வந்ததாகவும், அவர்களையும் போலீசார் பிடித்ததாகவும் தெரிகிறது.
இந்த கொலை சம்பவம் பவானி, சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. சார்பில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்னை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25ம் தேதி ஈரோடு மண்டல மாநாடு நடைபெறுகிறது.
நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 15 கட்சி மாவட்டங்களை கொண்ட இந்த மண்டல மாநாடு பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் நடைபெறுகிறது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. எம்.பி.யும், கொள்கை பரப்புச்செயலாளருமாகிய திருச்சி சிவா வந்திருந்தார். மாநாட்டுத் திடலை முழுவதுமாக பார்வையிட்ட அவர் கூறியதாவது:-
இந்த மாநாட்டிற்காக 41 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துமிடம், தலைவர்கள் அமர்வதற்காக கருங்கல் மேடை சுமார் 2 ஆயிரத்து 700 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தமேடையில் தலைவர்கள் ஓய்வு மற்றும் ஆலோசனை நடத்துவதற்கு ஏற்ற வகையில் முழுவதும் ஏசி கொண்ட 4 நிரந்தர அறைகள், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் சேர்கள் மற்றும் ஆயிரத்து 400 சதுரடி பிரமாண்ட முகப்பு தோற்றம் என பார்ப்போர் பிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
வருகிற 15-ம் தேதி முதல் புகைப்படக்கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் 26-ம் தேதி நூறு ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணமும் நடைபெறுகிறது. மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் நடைபெறும் இந்த மண்டல மாநாடு தி.மு.க.விற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் களத்தில் குதித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வரும் 10 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 10-ந்தேதி கமல்ஹாசன் பிற்பகல் 11 மணியளவில் ஈரோடு வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். வரவேற்பை பெற்றுக் கொள்ளும் கமல்ஹாசன் ஈரோடு பரிமளம் மகாலுக்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கமல் விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.
மாலை 4 மணியளவில் தனியார் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளிலிருந்து கமல்ஹாசன் கட்சியில் இணையும் விழா நடக்கிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மறுநாள் வரும் 11-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனது கட்சி கொடிகளை ஏற்றி பேசுகிறார்.
11-ந்தேதி தனது முதல் நிகழ்ச்சியாக கமல்ஹாசன் ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லத்துக்கு சென்று பார்வையிடுகிறார்.
தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசுகிறார். அதன் பிறகு சித்தோடு, பவானி, அந்தியூர், அத்தாணி, டி.என்.பாளையம், சத்தியமங்கலம் மற்றும் கோபியில் கட்சி கொடிகள் ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.
அன்று இரவு கோபியில் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் தங்குகிறார். #tamilnews
கோபி:
அந்தியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் பெயர் சுபகணேசன் (வயது 20). லாரி டிரைவர்.
செங்கோடனும் ருக்மணியும் பிரிந்து வாழ்கின்றனர். இது அவர்களது மகனான சுபகணேசனின் மனதை பாதித்தது.
எனவே அவர் தனது தந்தையிடமும் தாயிடமும் பேசினார். ‘‘நீங்கள் 2 பேரும் பிரிந்து வாழ்வதால் எனது பெயர் கெட்டுப்போகிறது. எனவே நீங்கள் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள்’’ என்று கூறினார்.
ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் கடத்தூர் அருகே மோடர்பாளையத்தில் தங்கி இருந்த தனது தாய் ருக்மணியை பார்க்க சபகணேசன் வந்தார்.
அப்போது தாயிடம் இதுபற்றி பேசினார். ஆனால் ருக்மணி தனது கணவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து சாதகமான பதிலை சொல்லவில்லை.
இதனால் சுபகணேசன் விரக்தி அடைந்து தூக்குபோட்டுக்கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபகணேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கொ.ம.தே.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.
கொங்கு மண்டலத்தில் தான் அதிக அளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தின் பாதி வருமானம் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது. வரியும் இங்கு தான் அதிகம் கட்டுகிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர் மூலம் புற்று நோய் அதிக அளவு வரக்கூடியது கொங்கு மண்டலத்தில்தான். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது நோய்கள் மக்களுக்கு வருகிறது. இ னால் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது அவசியமாகிறது.

மருத்துவமனை அமைக்க காலம் தாழ்த்துவது கண்டனத்துக்குறியது. அனைத்து கட்சியினரும் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைய எங்களுடன் போராட முன் வர வேண்டும். இனியும் மருத்துவமனை அமைக்க தாமதமானால் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள், டாக்டர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
ஒவ்வொரு அமைச்சர்களும் அந்தந்த மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுகிறார்கள். ஆனால் கொங்கு மண்டல அமைச்சர்கள் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அழுத்தம் கொடுக்காதது ஏன்? கட்சி தலைமைக்கு பயந்து அவர்கள் அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், பொன்னுவேல், மாநில தொழிற் சங்க தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வர மூர்த்தி, கோவிந்தராஜ், பிரபாகரன், முத்துசாமி, சிவராஜ், மகளிர் அணி தங்க மணி, தமிழரசி, கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி- ஈரோடு ரோட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் பலர் பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர்.
அதன்மூலம் கிடைத்த பணத்தை அன்று இரவு ஊழியர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கொடுத்தனர். உரிமையாளர் கணக்கை சரிபார்த்தார்.
பின்னர் அந்த பணத்தை அங்குள்ள வங்கியில் போட்டு வைக்க கொண்டு சென்றார். அந்த பணத்தை கள்ளநோட்டுகளை ஆய்வு செய்யும் எந்திரத்தில் வங்கி கேஷியர் செலுத்தினார்.
அப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொடுத்த பணத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது.
இந்த தகவலை பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் வங்கி கேஷியர் தெரிவித்தார். மேலும் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் கிழித்து எரிந்துவிடும்படியும் கூறி கள்ளநோட்டு மீது சீல் வைக்கப்பட்டது.
பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றியது யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெட்ரோல், டீசல் நிரப்பிய ஊழியர்களிடம் உரிமையாளர் கேட்டார்.
ஆனால் அந்த ஊழியர்களுக்கு யார் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்கள்? என்பது தெரியவில்லை. இதனால் அந்த ரூபாய் நோட்டை மாற்றியது யார்? என்பது தெரியாமல் உள்ளது. அதுபற்றிய விசாரணை நடக்கிறது.
பெட்ரோல் பங்க்கில் கள்ள நோட்டு சிக்கிய தகவல் பெருந்துறை முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கவுந்தப்பாடியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் உள்ளதோ? என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. #tamilnews






