என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த காட்சி.
    X
    கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த காட்சி.

    ஈரோடு மாவட்டத்தில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    எச். ராஜாவை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எச். ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து எச். ராஜாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் இன்று அதிகாலை பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதையொட்டி பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதேபோல ஈரோடு கச்சேரி வீதியில் அண்ணா மற்றும் பெரியார் நினைவகம் உள்ளது. அங்கு இன்று 2-வது நாளாக ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கோபி பெரியார் திடல் முன்புறம் உள்ள பெரியார் சிலைக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் அந்தந்த பகுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews


    Next Story
    ×