என் மலர்
செய்திகள்

எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீசார் பறித்த காட்சி.
எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் - உருவ பொம்மை எரிப்பு
எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு அவரது உருவ பொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைத்தெறியப்படும் நாள் விரைவில் வரும் என தெரிவித்ததையடுத்து எச்.ராஜாவிற்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன்பு சத்தி-மைசூர் ரோட்டில் ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதோடு எச்.ராஜாவை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. #tamilnews

Next Story