என் மலர்
செய்திகள்

வாகன சோதனையின் போது பொதுமக்களை விரட்டி பிடிக்கக் கூடாது- ஈரோடு எஸ்.பி. உத்தரவு
ஈரோடு:
திருச்சி துவாக்குடி அருகே கர்ப்பிணி பெண் உஷா தனது கணவர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது வாகன சோத னையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை நிறுத்தினார்.
ஏன் ஹெல்மெட் அணிய வில்லை? என இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு ஆஸ்பத்திரி செல்லும் அவசரத்தில் வந்து விட்டோம் என்று ராஜா கூறி விட்டு புறப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த வண்டியை துரத்தி காலால் எட்டி உதைத்தார். இதில் மோட்டார் சைக் கிளுடன் கணவர்- மனைவியும் கீழே விழுந்தனர். இதில் மனைவி உஷாவின் தலையில் பலத்த அடிப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
தமிழகம் முழுவதும் பேரதிர்வையும், அதிர்ச்சியையும் இந்த கொடூர சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஈரோடு மாவட்ட சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.
வாகனத்தை நிறுத்த சொல்லும் போது அவர்கள் தெரிந்தோ... தெரியாமலோ நிற்காமல் போய் விட்டால் அவர்களை துரத்தக்கூடாது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து கொண்டு பிறகு விசாரிக்க வேண்டும்.
மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கடுமையாகவோ, கோபமாகவோ நடக்க கூடாது. மென்மையை கடைப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறி உள்ளார்.






