என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக இருங்கள்- ஜி.கே.மணி
    X

    சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக இருங்கள்- ஜி.கே.மணி

    சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சி தலைமை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்கட்சி கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் அவ்வபோது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் கருத்துகளை கேட்டறிந்தார். அவர்ளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

    இந்நிலையில் ஈரோடு ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு நல்லி மஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார்.மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது.-

    மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.செயல் ஆற்றல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் இப்போதே தங்களை பணியை செய்ய தொடங்கினால் நாம் வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார்.#tamilnews

    Next Story
    ×