என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு நேதாஜி மார்க்கெட் அருகே மயங்கி கிடந்தவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி பின்புரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. 5 அடிஉயரம் உள்ள அவர் வலது மார்பில் ஒரு கருப்பு மச்சமும், இடது கால் முட்டிக்கு கீழ் காயத்தழும்பும் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே தீ விபத்தில் பள்ளி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாதையன் .கூலி தொழிலாளி. இவரது மனைவி வைதேகி. இவர்களுக்கு ஒரு மகனும் , தேஜாஸ்ரீ (வயது 9) என்ற மகளும் உள்ளனர்.

    தற்போது மாதையன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு திருநகர் காலனி ராஜாஜிபுரத்தில் வசித்து வருகிறார். மாணவி தேஜாஸ்ரீ இங்கு உள்ள ஒரு அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தேஜாஸ்ரீ இருந்தார் அப்போது மாணவி தீப்பெட்டியில் பற்ற வைத்தார் இதில் எதிர்பாராத வகையில் அவரது துணியில் பிடித்துக் கொண்டது. இதனால் வேதனையில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி தேஜாஸ்ரீ சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி தேஜாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோட்டில் நேற்று மாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாவட்டத்தின் பல இடங்களில் இடி-மின்னலுடன் விடிய-விடிய கொட்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாவட்டத்தில் பல இடங்களில் இடி-மின்னலுடன் விடிய-விடிய கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி பகுதியில் 44 மி.மீ மழை கொட்டியது. இதேபோல் அம்மாபேட்டை, கோபி, ஈரோடு, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம் அணை, எலந்தகுட்டைமேடு உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு காவிரி கரை பகுதி, மொடக்குறிச்சி, 46 புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் மழை தண்ணீர் புகுந்து சூழ்ந்து நின்றது. தொடர்ந்து மழை பெய்து தண்ணீர் மேலும் புகுந்ததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
    ஈரோடு அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜலகண்டஹல்லியைச் சேர்ந்தவர் சிவா (வயது 23). இதேபோல் கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (18).

    இவர்கள் 2 பேரும் ஒருவேனில் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    வேனை சிவா ஓட்ட அருகில் ஸ்ரீகாந்த் அமர்ந்து கொண்டு சென்றார்.

    இந்த வேன் ஈரோடு அருகே உள்ள சித்தோடு பகுதியில் வந்தபோது வேனின் ஒரு டயர் திடீரென வெடித்தது. இதனால் அவர்கள் வேனை கங்காபுரம்- ஆட்டையம்பாளையம் இடையே பைபாஸ் ரோட்டில் நிறுத்தி கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.

    இதில் எதிர்பாராத வகையில் அந்த ஆம்னி பஸ் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த சிவா மற்றும் ஸ்ரீகாந்த் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான இருவரின் உடல்களை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன் (32) படுகாயம் அடைந்தார். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்தில் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே வேன் டிரைவர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (வயது 40). கோவை துடியலூரை சேர்ந்தவர் நேரு (55).

    இவர்கள் இருவரும் மினி டோர் வேனில் கண்ணாடி பாரம் ஏற்றி கொண்டு அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

    இந்த வேன் டி.என்.பாளையம் அருகே வரப்பள்ளம் என்ற இடத்தில் வந்த போது கயிறு லூசாகி விட்டதால் அதை சரி செய்ய இருவரும் வேனை விட்டு இறங்கினர்.

    அவர்கள் லூசான கயிற்றை சரி செய்தனர். அப்போது பின்னால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உருளை கிழங்கு ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென அவர்கள் மீது மோதியது.

    இதில் நரசிம்ம மூர்த்தியும், நேருவும் படுகாயம் அடைந்தனர். இதில் நரசிம்ம மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நேரு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    பவானிசாகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 54). பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ் பெக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று மாலை பவானி சாகர் பூங்கா அருகே போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரை வாகனம் மூலம் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் அபிபுல்லாவுக்கு மனைவி, ‌ஷமீம், (50), முஸ்தபா, என்ற மகன், ஜெசியா என்ற மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் முஸ்தபா, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை பேராசிரியர் மனைவியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி.

    கணவன் -மனைவி இருவரும் தீபாவளிக்காக சொந்த ஊரான சென்னிமலைக்கு வந்திருந்தனர் .

    சொந்த வேலையாக சென்னிமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்ததனர். வண்டியை வடிவேல் ஒட்ட பின்னால் சுகந்தி உட்கார்ந்து வந்தார்.

    சென்னிமலை ரோடு, முத்தம் பாளையம் அருகில் சென்ற போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் வடிவேல் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தனர்.

    இதனால் நிலை தடுமாறிய போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பின்னால் அமர்ந்து இருந்த சுகந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    இதனால் சுகந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது இச்சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதனையடுத்து தாலுகா போலீசில் வடிவேலும் சுகந்தியும் புகார் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

    ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வருவதால் மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சத்தில் உள்ளனர்

    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மருந்துக்கடை அதிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அகே உள்ள சோளி பாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). இவர் பெருந்துறை புதிய பஸ் நிலையம் உள்ளே மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் சோளி பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பவானி பைபாஸ் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனசேகர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    விபத்தில் பலியான மருந்து கடை உரிமையாளர் தன சேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

    ஈரோட்டில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி மோகன் குமாரமங்கலம் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி வடிவு (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வடிவு சூரம்பட்டி நால்ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வந்தார்.

    கணவர் இறந்தலில் இருந்து வடிவு கணவர் நினைவாகவே இருந்து வந்துள்ளார். மேலும் தற்போது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டிலிருந்த வடிவு தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்கி போட்டுகொண்டார் . அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி அருகே குட்டையில் குளித்த வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்து தொட்டிபாளையம் பணங்காட்டு காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 23).

    இவர் பவானியில் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்துவருகிறார் திருமணமாகவில்லை இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் மயிலம்பாடி கால்வாய் நாயக்கனூர் கசிவு நீர் குட்டையில் குளிக்க சென்றார்

    நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய பிரேம்குமார் உயிரிழந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் கிடந்த உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    ஆப்பக்கூடல் அருகே 2 மொபட்டுகள் திடீரென மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சிந்த கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது 25). கட்டிட தொழிலாளி.

    நேற்று இரவு 8 மணி அளவில் இவர் மொபட்டில் ஆப்பக்கூடலில் இருந்து ஆ.புதுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே மற்றொரு மொபட் வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யாவு பவானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு சேலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

    ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகிரி அருகே வி‌ஷம் குடித்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 75). இவரது மகள் வனிதா ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தனது கணவருடன் அரசு மருத்துமனை குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    முத்துசாமிக்கு முதுமையின் காரணமாக கடந்த சில நாட்களாக வயிற்று வலி இதய வலி இருந்து வந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக சிவகிரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.

    சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால் முத்துசாமி விஷம் குடித்து விட்டார் பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார் .

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    ×