என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை (கோப்புப்படம்)
    X
    மழை (கோப்புப்படம்)

    ஈரோடு மாவட்டத்தில் விடிய-விடிய கொட்டிய மழை

    ஈரோட்டில் நேற்று மாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாவட்டத்தின் பல இடங்களில் இடி-மின்னலுடன் விடிய-விடிய கொட்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாவட்டத்தில் பல இடங்களில் இடி-மின்னலுடன் விடிய-விடிய கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி பகுதியில் 44 மி.மீ மழை கொட்டியது. இதேபோல் அம்மாபேட்டை, கோபி, ஈரோடு, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம் அணை, எலந்தகுட்டைமேடு உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு காவிரி கரை பகுதி, மொடக்குறிச்சி, 46 புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் மழை தண்ணீர் புகுந்து சூழ்ந்து நின்றது. தொடர்ந்து மழை பெய்து தண்ணீர் மேலும் புகுந்ததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
    Next Story
    ×