search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் நகை பறிப்பு"

    • மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    • நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடுமுறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மார்த்தாண்டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறுவனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்ம மனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீசாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த நபர்கள் ராமரின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து திடீரென சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 55 கிராம் எடை கொண்ட 2 தங்க நகைகளை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக கடையம் போலீசில் சங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே சாலையில் செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

    கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ×