என் மலர்

    நீங்கள் தேடியது "school student death"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

    அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத் தியது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வரதலாம்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் இவரது மகன் திலக்ராஜன் (வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    திலக்ராஜன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    ஆட்டோ டிரைவருடன் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். மாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது நிலை தடுமாறி திலக்ராஜன் கீழே விழுந்தார். ஆட்டோவின் பின் சக்கரம் திலக்ராஜன் மீது ஏறி இறங்கியது.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு திலக்ராஜன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூர் அருகே வீட்டில் விளையாடியபோது புடவை கழுற்றில் சுற்றி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையம் 4-வது தெருவை சேர்ந்தவர் நிசாம். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நிசாமின் 2-வது மகள் பவுசியா (வயது 9). இவர், 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்த பவுசியா, புடவையில் தொங்கவிடப்பட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது புடவை கழுற்றில் சுற்றி இறுகியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    மூச்சு பேச்சின்றி கிடந்த மகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் பவுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சூலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மகன் விஸ்வகுமார் (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தொடர் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். விஸ்வகுமார் ஓரத்தில் நின்று குளித்து கொண்டிருக்கும் போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீரில் மூழ்கிய விஸ்வகுமாரை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுரண்டையில் நடை பயிற்சி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி மகன் அருள் (வயது 17). அம்மன் சன்னதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் சிவா (15), அம்பேத்கர் நகர் பால்துரை மகன் சங்கை (17). பள்ளி மாணவர்களான அருள், சிவா, சங்கை ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் பங்களா சுரண்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இன்று காலை நண்பர்கள் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவன் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிவா, சங்கை ஆகியோர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ் பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்கள் சிவா, சங்கை ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பலியான அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுரண்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் எது? அதனை ஓட்டி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். நடை பயிற்சி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல்லில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் அருள்ஞான பிரகாசம் மகள் கேசியாராணி (வயது17). கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது உறவினர் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த அருள்ஞானபாத்திமா (37) என்வருடன் பேட்டரி பைக்கில் அனுமந்தராயன் கோட்டையில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு சென்று கொண்டிருந்தார்.

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காப்பி கடை பிரிவு அருகே வேகமாக வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலை தடுமாறிய பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    கேசியாராணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அருள்ஞானபாத்திமா திண்டுக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார், லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உசிலம்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் விளையாடிய போது ஜன்னல் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பரிதாபமாக இறந்தார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கீரிப்பட்டி கிராமம். இங்கு அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப்பள்ளியில் அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராகவன் (வயது 12) 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராகவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் மேல் பகுதியில் உள்ள சுவர் இடிந்து ராகவன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த ராகவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராகவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லிக்குப்பம் அருகே இன்று காலை அரசு பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக தவறி விழுந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பலப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி (வயது 16 ) இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை தனலட்சுமி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக பலப்பட்டில் இருந்து சி.என்.பாளையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினாள். பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க வாசலின் வழியாக திடீரென்று தனலட்சுமி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக தனலட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் தனலட்சுமி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கல்பட்டு அருகே கான்கிரீட் இடிந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி அபிதா, மகன்கள் சரவணன் (14), பிரவீன் (8), மகள் பிரவீனா (11).

    நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் பிதா, பள்ளி மாணவி பிரவீனா, சிறுவன் பிரவீன் காயம் அடைந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த சிறுமி பிரவீனா சம்பவ இடத்திலேயே இறந்தாள்.

    அபிதா, பிரவீன் ஆகியோரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவணன் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றதால் காயமின்றி தப்பினான்.

    இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். #Tamilnews

    ×