என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு அருகே கான்கிரீட் இடிந்து பள்ளி மாணவி பலி
செங்கல்பட்டு அருகே கான்கிரீட் இடிந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி அபிதா, மகன்கள் சரவணன் (14), பிரவீன் (8), மகள் பிரவீனா (11).
நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் பிதா, பள்ளி மாணவி பிரவீனா, சிறுவன் பிரவீன் காயம் அடைந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த சிறுமி பிரவீனா சம்பவ இடத்திலேயே இறந்தாள்.
அபிதா, பிரவீன் ஆகியோரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவணன் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றதால் காயமின்றி தப்பினான்.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். #Tamilnews
Next Story






