திருச்செந்தூரில் பள்ளி மாணவன் மர்ம மரணம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.
திருச்செந்தூரில் பள்ளி மாணவன் மர்ம மரணம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com