என் மலர்
ஈரோடு
- ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
- அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
ஈரோடு:
தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.
ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.
இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
- வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்ற பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
- அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இரவு அந்த வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்றள்ளார். அப்பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது.
- தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளை யத்தில் அரசு சார்பில் தரை மட்டம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தனியார் நிறுவனத்தினர் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கட்டுமான பணிகளுக்காக ஜே.சி.பி., பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி மாலை முதல் 6-ந் தேதி அதிகாலை சுமார் 2 மணி வரை 2 ஜே.சி.பி. ஆப்ரேட்டர்கள் வேலை செய்து விட்டு ஜே.சி.பி. வாகனத்தை அப்பகுதியிலேயே விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பணியாளர்கள் வந்து பார்த்த போது ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால், யாரோ திருடி சென்றிருப்பதை அறிந்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
- லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடி வகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வி ன்போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க்கன்காய், புடலை, அவரை மற்றும் சுரைகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீதமானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது வரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும், அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
ஈரோடு மாவட்டத்தில் 20,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழையானது கோபி செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை பின்செய் நேர்த்தி செய்வதற்காக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி குளிர்ப்ப தனக்கிடங்கு வளாகத்தில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
அதனைத் தொடர்ந்து கலெக்டர் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு விற்பனை குழு சார்பில் கோபி செட்டிபாளையத்தில் செயல்படும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள், பயறு வகைகள், புளி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.
- பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார்.
- பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு ஆர்.எம்.புதூர் சூரியம்பாளையம் ஜவுளி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பெரியநாயகி (வயது 48). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காலை வேலை விஷயமாக விஜயமங்கலம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியநாயகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
- தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, மயிலாடி யில், பழமையான செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷக விழா, 5-ந் தேதி, மங்கள இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, இரண்டாகாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடந்தது. காலை, 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கு சம கால கும்பாபிேஷகமும், பின்னர், செல்வ விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தினை முருங்கத்தொழுவு கிராம பிரலிங்கேஸ்வரர் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவாகம ரத்னம் சிவஸ்ரீ. அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரி–யார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஊஞ்சலூர் அருகில் கிளாம்பாடிகிராமம் கருமாண்டாம் பாளையத்தில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கருப்பண்ணசாமி, பொட்டுசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக நிகழ்ச்சிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
- சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது.
- இந்த ஆனி திருமஞ்சன அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது.
இதையொட்டி உற்சவர் நடராஜ பெருமானுக்கும்,தாயார் சிவகாமி அம்மையாருக்கும் 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.
இந்த ஆனி திருமஞ்சன அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.
- இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42) . இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, டாக்டர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரிடம் தனித்தனியாக மருத்துவப் பணிகள் குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையில் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் உறுப்பினர்கள் மல்லிகா, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார், முரளிகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கருமுட்டை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் கருமுட்டை விவகாரம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்புடைய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரம் குறித்தும் கேட்டறிந்தனர்.
- பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84.37 அடியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,527 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
- அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக லாரியில் ஏற்றி செல்லப்படும் கரும்புகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் காத்திருக்கிறது.
மேலும் சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என்று யானைகள் தேடி வருகிறது.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு யானை கூட்டம் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்சை விரட்டியது. டிரைவர் சாதுர்யமாக பஸ்சை பின்நோக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கி யானைகளிடம் இருந்து தப்பித்த சம்பவம் நடந்தது.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி தனது தோட்டத்தில் இரவு காவல் பணி மேற்கொண்டார். அப்போது அவரது தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது.
சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் யானை தாக்கி இறந்த விவசாயி மல்லப்பா உடலையும் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போாட்டம் நடத்தினர்.
இதையடுத்து வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை பிடிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சின்னதம்பி என்ற கும்கி யானை வனத்துறை லாரி மூலம் ஏற்றப்பட்டு இன்று காலை தாளவாடி பகுதிக்கு வந்தடைந்தது.
இன்று மாலைக்குள் மற்றொரு கும்கி யானை ராஜவர்தன் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து 2 கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்க உள்ளனர். ஒற்றை யானையை பிடிக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளதால் தாளவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- சென்னிமலை அருகே கம்பெனியில் பூட்டை உடைத்து ஜெனரேட்டர், இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை உள்ளது. இங்கு தங்கவேல் என்பவர் கம்பெனி நடத்தி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் இவர் கம்பெனியை நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்நிலையில் அங்கு மின்வாரிய பணியாளர் ஒருவர் கணக்கு எடுப்பதற்காக சென்ற பொழுது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தங்கவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெனரேட்டர் மற்றும் சில இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசில் தங்கவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கம்பெனியை லீசுக்கு நடத்திய திண்டல், செங்கோடம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி தூத்துக்குடியை அடுத்த நசரேத் பகுதியை சேர்ந்த பட்டு ஜெபசிங் என்பவர் உடன் சேர்ந்து 2 பேரும் ஜெனரேட்டர் உள்பட இரும்பு பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ், பட்டு ஜெபசிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






