search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பெனியில் ஜெனரேட்டர்-இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது
    X

    கம்பெனியில் ஜெனரேட்டர்-இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது

    • சென்னிமலை அருகே கம்பெனியில் பூட்டை உடைத்து ஜெனரேட்டர், இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை உள்ளது. இங்கு தங்கவேல் என்பவர் கம்பெனி நடத்தி வருகிறார்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் இவர் கம்பெனியை நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்நிலையில் அங்கு மின்வாரிய பணியாளர் ஒருவர் கணக்கு எடுப்பதற்காக சென்ற பொழுது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தங்கவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெனரேட்டர் மற்றும் சில இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசில் தங்கவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கம்பெனியை லீசுக்கு நடத்திய திண்டல், செங்கோடம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி தூத்துக்குடியை அடுத்த நசரேத் பகுதியை சேர்ந்த பட்டு ஜெபசிங் என்பவர் உடன் சேர்ந்து 2 பேரும் ஜெனரேட்டர் உள்பட இரும்பு பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ், பட்டு ஜெபசிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×