என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ம் கல்வி–யாண்டில் கடந்த ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்- 18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்ப–வர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி கோபிசெட்டி–பாளையம், சத்தியமங்கலம், ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் பட்ட–தாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர். குறிப்பாக பெண் பட்டதாரிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்து சென்றனர்.

    சிலர் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பு யாக வேள்வி பூஜைகள், பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து பால், தயிர் உட்பட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் மூலவர், உற்சவருக்கு நடந்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள் பாலித்தனர்.

    பின்னர் உற்சவ–மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
    • முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 40 ஆயிரத்து 38 பேர் போட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

    அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. எனவே தடுப்பு நடவடிக்கையாக முதலில் 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.

    இதேபோல் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 40 ஆயிரத்து 38 பேர் போட்டு உள்ளனர். இது 91 சதவீதம் ஆகும். 13 லட்சத்து 71 ஆயிரத்து 7 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 76 சதவீதம் ஆகும்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 69 ஆயிரத்து 62 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.

    இதேபோல் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 11 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 80,476 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

    இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 54 ஆயிரத்து 926 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். 45 ஆயிரத்து 728 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் ரெயில் 12 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரெயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைந்தது.

    இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு கிளம்பும் ரெயில் 11.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்து அடைந்தது. இதேபோல் மாலை 4.35 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரெயில் 8.25 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்தடையும். இவ்வறாக நாள் ஒன்றுக்கு 2 முறை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால், ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோட்டிற்கு பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது.

    இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.

    • கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,088 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 81 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் இருமல், சளி அறிகுறி இருப்ப வர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்து வமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

    மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து தடுப்பு நடவடி க்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.

    இதேபோல் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    பவானிசாகர் அணை பூங்காவையொட்டி 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்குள்ள பொறித்த மீன்களை சாப்பிடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் மீன் விற்பனை நிலையம் மற்றும் பூங்கா எதிரில் செயல்படும் மீன் ரோஸ்ட் கடைகள் மற்றும் உணவகங்களில் கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    சத்தியமங்கலம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மணி தலைமையிலான அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் 15 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சி, செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொரித்து வைக்கப்பட்ட 5 கிலோ மீன் ரோஸ்ட் வகை, செயற்கை நிறம் சேர்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்கள் என மொத்தம் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தையும் அழித்தனர்.

    பின்னர் செயற்கை நிறம் சேர்க்காமல் மீன் இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் பயன்படுத்த கூடாது. மீன்கள் தரமானதாகவும் செயற்கை நிறம் சேர்க்கப்படாமல் மசாலா பொடிகள் மட்டுமே கலக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.

    செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொறித்து வைக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.இந்த கடைக்காரர்களுக்கு 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    • பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதையத்து நேற்று ஈஸ்வர மூர்த்தியை முதன்மை பிளாண்டு மேலாளர் கிரிஸ் வரதராஜன் என்பவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். இதில் 74 தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பலர் குவிந்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    மேலும் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்தார். தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×