பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.27 அடியாக உயர்வு

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.27 அடியாக உயர்வு
Published on

சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com