என் மலர்tooltip icon

    ஈரோடு

    • குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.
    • இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் குன்றி மற்றும் கூத்தம்பாளையம் என ஊராட்சிகளில் சின்ன குன்றி, பெரியகுன்றி, கிளமன்ஸ் தொட்டி, மாகாளி தொட்டி, அணில் நத்தம் பண்ணையத்தூர், கோவிலூர், ஆனந்த நகர், கீழுர், கோம்பை தொட்டி, கோம்பையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு ெதாலை தொடர்பு வசதி இல்லாததால் செல்போன் சேவை இன்றி மலை கிராம மக்கள் பரிதவித்து வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு குன்றி பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது நாட்களே செயல்பட்ட அந்த டவர் மீண்டும் செயல்பாடு இன்றி இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

    சில வாரங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனம் மூலம் குன்றி பகுதியில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது.

    இந்த செல்போன் கோபுரம் கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இயங்க தொடங்கியது.

    இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    இதனால் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் அப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் ரூ. 86.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குத்தியாலத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
    • இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இரண்டு டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் 14 என 16 பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

    இதன்படி, அம்மா–பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் வார்டு எண்–3ல் நால்வர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதுார் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு, 20 பேர் போட்டியிட்டனர்.

    டவுன் பஞ்சாயத்து பதவிக்கு மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரமும், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ஓட்டுச்சீட்டும் பயன்படுத்தப்பட்டது. காலை, 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

    கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைப்படி, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். கிருமி நாசினியால் கைகள் சுத்தம் செய்து, ஓட்டுப்பதிவு செய்தனர். மொத்தம், 8 ஓட்டுச்சாவடியிலும் தலா ஒரு தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் உட்பட தலா 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

    அந்தந்த யூனியன் பி.டி.ஓ.க்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்பட்டு, தேர்தல் நிறைவு பெற்றதும், அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு ஓட்டுப்பெட்டியை எடுத்து சென்றனர்.

    ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இன்ஸ்பெக்டர் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    பஞ்சாயத்துக்கான 5 வார்டில், 64.01 சதவீதம், இரு டவுன் பஞ்சாயத்துகளில் 87.51 சதவீதம் என, 69.58 சதவீத ஓட்டுகள் பதிவானது.இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. 

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
    • இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.

    இந்நிலையில் இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    71 வாகனங்கள் முகாமிற்கு பயன்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
    • குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கொடுமுடி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த கொள த்துப்பாளையம் கிராமம் கொம்பனைபுதூரில் உள்ள குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக மேற்படி இடத்தை சர்வே செய்து நடவடிக்கை எடுக்கும் படி கடந்த 28.6.22 அன்று தீர்ப்பு வழங்கியது.

    அதன் பேரில் கொடு முடி தாசில்தார் மாசிலா மணி தலைமையில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் முன்னி லையில் குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    நிலஅளவையின் போது கிளாம்பாடி பிர்க்கா நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கொளத்துப்பாளையம் சுசீலா, கொளாநல்லி பிரகாஷ், ஊஞ்சலூர் ரமேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய மான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடை களை அணிந்து மசூதி களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதே போல் ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ரஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பெரிய அக்ர ஹாரம் தாவூதிய்யா மசூதி, காளைமாட்டு சிலை ஜாமியா மசூதி, காவேரி ரோடு ஜன்னத்பிர்தவ்ஸ் மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி,

    ஓடை ப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, கனிராவுத்தர்குளம் ஜாமியா மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அந்தியூர் பர்கூர் சாலை யில் உள்ள மஜித் தேனூர்பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீத் தலைமையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது

    இதில் சுன்னத் ஜமாத் செயலாளர் ஷனவாஸ், கமிட்டி உறுப்பினர் கதர் ஹைதர் கான் மற்றும் சுன்னத் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொணடனர். இந்த தொழுகையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்பின்பு பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    கோபிசெட்டிபாளையம் முத்துசாமி வீதி ஈத்கா பள்ளிவாசல், நல்ல கவுண்டம்பாளையம், கலிங்கியம், சாமிநாதபுரம், கடத்தூர் உள்பட 13 இடங்களில் பக்தீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொரு வர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதே போல் சத்திய மங்கலம் மணிக்கூண்டு பெரிய பள்ளி வாசல், வண்டி பேட்டை சின்ன பள்ளி வாசல், வடக்கு பேட்டை நேருநகர் உள்பட 8 பள்ளி வாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

    மேலும் தாளவாடி ஜாமிய மஜித் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஏழை களுக்கு குர்பானி வழங்க ப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், பவானி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் 91 மசூதிகளிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

    பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

    பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது.
    • இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,724 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் 87 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பவானி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள கூலிக்காரன் பாளையம் அடுத்த ஏமம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கூலி தொழிலாளி இவரது மனைவி நாகேஸ்வரி (33). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் நாகேஸ்வரிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் நாகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது களைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 108 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. இந்த பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
    • இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த வீரன் மகன் கேசவன்(21). இவர் அவரது தந்தை டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது நண்பரை பார்த்து விட்டு வந்து வீட்டில் அவரது அம்மாவின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கேசவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதன்பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல்(27). இவர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பூங்கம்பள்ளியில் அவரது மனைவி, குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சக்திவேலுக்கு மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்த சக்திவேல் சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியசேமூர் கனிராவுத்தர்குளம், காந்திநகரை சேர்ந்தவர் இளங்கோ (19). இவர் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் சி.ஏ. படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த இளங்கோ செல்போனில் சிறிது நேரம் யாரிடமோ பேசிவிட்டு சாப்பிடாமல் தூங்க சென்று விட்டார். அதிகாலை இளங்கோவின் மாமனார் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    • ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–3 ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதூர் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு அ.தி.மு.க, தி.மு.க. சுயேட்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த 7 பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிங்கம்பேட்டை ஊராட்சி யில் ஒரு வாக்குச்சாவடி மையம், பெரிய புலியூரில் ஒரு வாக்குச்சாவடி மையம், தொப்பம்பாளையத்தில் ஒரு வாக்கு சாவடி மையம், கோட்டு புள்ளாபாளையத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம், 46 புதூரில் இரண்டு வாக்குச்சாவடி மையம், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வாக்கு சாவடி மையம், அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர். காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

    பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தார்கள். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாக்குப்பதிவு நுழைவு வாயிலில் சானிடைசர்கள் கையில் தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டது. முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறையில் பொதுமக்கள் வாக்களித்தனர்.

    அத்தாணி, அம்மா–பேட்டை பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு பதிவு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

    தேர்தலை ஒட்டி ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 24 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியாக இந்த பகுதியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு அரசு சார்ந்த நிறுவ–னங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

    ×