விஷம் குடித்து பெண் பலி

பவானி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்து பெண் பலி
Published on

பவானி:

பவானி அருகே உள்ள கூலிக்காரன் பாளையம் அடுத்த ஏமம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கூலி தொழிலாளி இவரது மனைவி நாகேஸ்வரி (33). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் நாகேஸ்வரிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் நாகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது களைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com