search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3,194 மையங்களில் கொரோனா  தடுப்பூசி முகாம் தொடங்கியது
    X

    3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
    • இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.

    இந்நிலையில் இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    71 வாகனங்கள் முகாமிற்கு பயன்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×