என் மலர்tooltip icon

    கடலூர்

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.
    • 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நரியன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் தேவநாதன் (36)கமிஷனுக்கு முந்திரி கொட்டை வாங்கி உடைத்து முந்திரி பயிர் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்காடாம்புலியூர் என்.வி.கேஷ்யூஸ் கம்பெனி உரிமையாளர்களான சண்முகம்,கார்த்தி ஆகியோரிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவநாதன்,வீரசிங்கண் குப்பத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவரிடம் 496 கிலோ முந்திரிப் பயிரை விற்பனைக்காக கொண்டு வந்து கொடுத்தபோது எதிரிகள் பின் தொடர்ந்து வந்து தேவநாதனை தாக்கி அவர்கள் கொண்டு வந்த வாகனத்தில் தேவநாதனையும் முந்திரி பயிரையும் ஏற்றிக்கொண்டு காடாம்புலியூர் கம்பெனிக்கு கொண்டு சென்று முந்திரி பயிரை பிடுங்கிக் கொண்டு தேவநாதனை தாக்கினர்.மேலும் அவரது தம்பி தேவேந்திரனை வரவழைத்து அவரையும் தாக்கி அவரிடம் இந்த செல்போன் 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்துகாடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்ராஜா தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார்.
    • திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது46). இவரது மகள் மோகனப்பிரியா. சம்பவத்தன்று தனது கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார். அப்போது கோழி பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திண்ணையில் இருந்த தங்க செயினை திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தனபதி. இவர்களுக்குள் முன்விரோதம் தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜபிரியா கொடுத்த புகாரின் பேரில் தனபதி, விஜயா, சரண்யா, ஜெயசூர்யா மீதும், ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம், மணிமேகலை, ராஜப்பிரியா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாலட்சுமி கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் இருவர் தாலி செயினை பறித்து சென்றனர். கடலூர் மாவட்டம் கனகசபைநகர், தில்லை நடராஜர் சாலையைச் சேர்ந்த கணேஷ். இவரது மனைவி மகாலட்சுமி (50). இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர். மோட்டார் சைக்கிள் கனகசபைநகர் 4-வது குறுக்குத் தெருவில் சென்ற போது, இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் மகாலட்சுமி அணிந்திருந்த சுமார் 10 பவுன் மதிப்புள்ள தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தர படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸார் பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துகடை ஊழியர் தட்டாஞ்சாவடி பிரகாசிடம் (25) விசாரணை நடத்தினர்.

    அவர்பண்ருட்டி, தட்டா ஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5000 கிலோ புகையிலை பொரு ட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    • மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வரத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும், நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், சிறிய வகை இறால் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும், பாறை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    • வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்வரத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும், நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், சிறிய வகை இறால் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும், பாறை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    • மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல் சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சியினை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

    அதன்படி, கடலூர் செம்மங்குப்பத்தில் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் விடுக்கப்படும் புயல் பேரிடர் ஒத்திகை அறிவிப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றமானது, அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது குறித்தும், மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சிறுபாளையூர் (வடக்கு), புவனகிரி சிலம்பிமங்கலம், சிதம்பரம் பெராம்பட்டு, காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை ஆகிய இடங்களிலும் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    • இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
    • ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர்.

    கடலூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்ய சந்திரயான் லேண்டர் விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்து இதற்காக 'ஆதித்யா- எல்-1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷதீஷ் தவான் விண்வெளி ஆய்வுக்கூட மையத்தில் இருந்து இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான 24 மணிநேர 'கவுண்ட்டவுன்' நேற்று 11.50 மணிக்கு தொடங்கியது. இதனை யடுத்து இந்தியா முழுவதும் ஆதித்யா வெற்றியடைய வேண்டி பல்வேறு பிரார்த்த னைகளை மக்கள் செய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னா ர்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர். மேலும் இந்த பள்ளியின் தாளாளர் சுதா மணிரத்னம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மேலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டி கோவிலில் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    புவனகிரியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் புவனகிரி பங்களா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பாபு (வயது 43), சுரேஷ் (43) ஆகியோர் தனித்தனியே நடத்தி வந்த கடைகளில், ஹான்ஸ், பான்பராக் போன்றவைகள் கட்டுகட்டாக இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் செல்வவினாயகர் கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு இன்று காலை 6 மணியளவில் சாமி கும்பிட பக்தர்கள் வந்தனர். கோவில் முடியிருந்ததால் வெளியில் இருந்து சாமி கும்பிட்டனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த உண்டியல், கோவில் உட்பிரகாரத்தின் ஓரமுள்ள கிரில் கேட் அருகில் இருந்தது. அருகில் சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் பக்தர்கள் தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த உண்டி யலில் இருந்த ரூபாய் நோட்டு கள் மட்டும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. சில்ல ரை நாணயங்கள் அங்கேயே கிடந்ததை கண்டனர். கோவிலின் நடுமை யத்தில் இருந்த உண்டியலை, முன்பகுதி வளைக்கப்பட்ட இரும்பு கம்பியால் கிரில் கேட் அருகே இழுத்து. உண்டி யலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை ஊர் பிரமுகர்கள் கண்டுணர்ந்தனர். மேலும், கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், இது தொடர்பாக அங்கிருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவில் உண்டியல் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப் படாததால் சுமார் ரூ.1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று ஊர் பிரமுகர்கள் கூறினார்கள். வரும் 18-ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த காணிக்கை பணத்தை பயன்படுத்த ஊர் பிர முகர்கள் திட்டமிட்டிருந்த தும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டது. அங்கிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலின் உண்டியலை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.கே. நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 89 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக வுள்ளது.
    • ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி 76 இடை நிலை ஆசிரியர், 7 பட்டதாரி ஆசிரியர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 89 ஆசிரி யர்கள் பணியிடம் காலியாக வுள்ளது. கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், கடலூர், சிதம்பரம், விருத்தா சலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப் பட்டுள்ளது. மேற்கண்ட காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்த னையின் அடிப்படை யிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரிய ருக்கு ரூ.12,000 பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் முது கலை பட்டதாரி ஆசிரிய ருக்கு ரூ.18,000 வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர், ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலி னத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதி களைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரி பார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

    மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம், தேர்வு செய்யப்படும் இடைநிைல பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2024-ம் மாதம் வரை மட்டும் தேர்வு செய்யப்படும். பணி நாடு நர்கள், ஆசிரியர் காலிப்பணி யடங்களை கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சி யர் அலுவலகங்களில் தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட காலிப்பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்க ளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்ப டைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×