பண்ருட்டி அருகே மகள் மாயம் - தந்தை புகார்

இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே மகள் மாயம் - தந்தை புகார்
Published on

கடலூர்:

புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகள் கோமதி (19). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், கோமதியின் தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார். இதில் பலாப்பட்டு ஊரைச் சார்ந்த பாலமுருகன், தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com