என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே நேர பிரச்சனையால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 தனியார் பஸ் டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது
- 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் போட்டி
- கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் விருத்தாச லத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னால் சிதம்பரத்தி லிருந்து-பெரம்பலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ்சும் வந்துள்ளது. 2 பஸ்களுக்கும் 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதில் அடிக்கடி இந்த 2 தனியார் பஸ் டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருந்துள்ளது.
இந்நிலையில் ஆவி னங்குடி பஸ் நிறுத்தத்தில் 2 பஸ்களையும் டிரைவர்கள் சாலையின் நடுவே நிறுத்திக் கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தால் அரை மணி நேரம் விருத்தா சலம்-திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் 2 தனியார் பஸ் டிரைவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.
ஆனால் 2 பேரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி ஆவினங்குடி போலீசார் தனியார் பஸ் டிரைவரான சோழராஜன், கல்யாண சுந்தரம், கண்டெக்டர்கள் கோபி, தேவராஜ், சக்திவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் 2 தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.






