பண்ருட்டி அருகே பட்டதாரி பெண் மாயம் தந்தை போலீசில் புகார்

கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.
பண்ருட்டி அருகே பட்டதாரி பெண் மாயம் தந்தை போலீசில் புகார்
Published on

கடலூர்:

பண்ருட்டி தட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகள் ஜெனனி (வயது 24), எம்.எஸ்சி பட்டதாரி. இவர் கடந்த 2-ம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பிதுரை மகளை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.

இதுகுறித்து தந்தை தம்பிதுரை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண் ஜெனனி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் ஜெனனியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியாதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com