என் மலர்tooltip icon

    கடலூர்

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனை த்து த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில்; பட்டா தொடர்பான 93 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 46 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொட ர்பாக 39 மனுக்களும், வேலை வாய்ப்பு தொட ர்பாக 26 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 52 மனு க்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 25 மனுக்க ளும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 64 மனுக்களும், இதர மனுக்கள் 285 ஆக மொத்தம் 630 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளு க்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்ப ட்டு விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என கலெக்டர் அலுவல ர்களுக்கு உத்தர விட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்கொலையா? போலீசார் விசாரணை
    • 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூரில் மஞ்சக்குப்ப த்தில் மைதானம் இருந்து வருகின்றது. இங்கு தினந்தோ றும் 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான நபர்கள் மைதானத்தில் அமர்ந்து பேசிவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள மேடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக இறந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தூக்கு மாட்டி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதியோர் தூக்குபோட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பழமை வாய்ந்த செல்லி யம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, வராஹி அம்மன் சிற ப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமு பூசாரி செய்திருந்தார்.

    • இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சென்று நடனம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 பேரை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

    இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிவகுரு, சத்யா, அகிலாண்டம், அருண் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காளிதேவி பெண் என்பதால், ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுத்து, தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தார்.
    • தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனுமாக இருவடிவமாக திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரின் எல்லையில் உள்ள தில்லைக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது.

    சிவம் பெரியதா, சக்தி பெரியதா என்ற விவாதம் கைலையங்கிரியில் சிவனுக்கும் சக்திக்கும் இடையே ஏற்பட்டது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தவும், பார்வதி தேவியின் கர்வத்தை அடக்கவும், சிவபெருமான் பார்வதிதேவியை, காளியாக மாறுமாறு சபித்துவிடுகிறார்.

    காளியான பார்வதி தேவியார் சிதம்பரம் தில்லைவனத்தில் வந்து தங்கிவிடுகிறார். வனத்தில் தங்கி இருந்து முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் தீங்கு செய்யத் தொடங்கினார். அப்போது ஆனந்தத் தாண்டவம் புரியும் ஈசனையும் ஆடல் போட்டிக்கு காளியான பார்வதி அழைத்தார்.

    ஈசனும், காளியும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். இதில் ஈசன் காதில் அணிந்திருந்த குண்டலத்தைக் கீழே விழச்செய்து, அக்குண்டலத்தைக் காலினால் எடுத்து காதில் பொருத்திக்கொண்டார். இத்தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெயர்.

    காளிதேவி பெண் என்பதால், ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுத்து, தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தார். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க சினம் நீங்கி 4 முகம் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரியாக உருக்கொண்டு தில்லை அம்மன் ஆனார். சிவனுடன் சிவகாமியாக இணைந்து காளியின் சாபம் நீங்கப்பெற்றார்.

    இவ்வாறாக தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனுமாக இருவடிவமாக இத்திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    இக்கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று காலை கன்னியா லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சாமுண்டி அம்மன் (தில்லைக்காளியம்மன்), தில்லை நான்முகி அம்மன் (தில்லையம்மன்), சபரிவாரசுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீசார் பாகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணை கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் முத்தழகி என்பவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், அதற்காக அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருவதும், தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார். 

    இதனால் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து பயிர் செய்யக்கூடிய நிலத்திற்கு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக கூறினார். உடனே போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா
    • எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித் வந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் தெருவில் வசிப்பவர் தீபா (வயது 26). 2 கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளியான இவர் தனது காலால் மனு எழுதி கலெக்டரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2 கைகளையும் இழந்த நான் பெட்டிக்கடை வைக்க விரும்புகிறேன். அதனால் எனக்கு பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். இதன் மூலம் நான் யாருடைய உதவியும் இன்றி எனது பெற்றோரை கவனித்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே எனக்கு பெட்டிக்கடை வைக்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. காலினால் மனு எழுதிய மாற்றுத் திறனாளி பெண்ணை, அங்கு வந்த பொதுமக்கள் அச்சரியத்துடன் பார்த்து சென் றனர்.

    • கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி வினோதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்து வருகின்றது. இந்நிலையில் வினோதா மீண்டும் கர்ப்பமான நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வினோதா தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று இரவு வினோதவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வினோதாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகள் கோமதி (19). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், கோமதியின் தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார். இதில் பலாப்பட்டு ஊரைச் சார்ந்த பாலமுருகன், தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் போட்டி
    • கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் விருத்தாச லத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னால் சிதம்பரத்தி லிருந்து-பெரம்பலூர் நோக்கி மற்றொரு தனியார் பஸ்சும் வந்துள்ளது. 2 பஸ்களுக்கும் 8 நிமிடம் மட்டுமே இடைவெளி இருப்பதால் தினந்தோறும் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதில் அடிக்கடி இந்த 2 தனியார் பஸ் டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருந்துள்ளது.

    இந்நிலையில் ஆவி னங்குடி பஸ் நிறுத்தத்தில் 2 பஸ்களையும் டிரைவர்கள் சாலையின் நடுவே நிறுத்திக் கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தால் அரை மணி நேரம் விருத்தா சலம்-திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் 2 தனியார் பஸ் டிரைவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். 

    ஆனால் 2 பேரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டரை கைது செய்யவும் அவர்கள் பஸ்சை பறிமுதல் செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி ஆவினங்குடி போலீசார் தனியார் பஸ் டிரைவரான சோழராஜன், கல்யாண சுந்தரம், கண்டெக்டர்கள் கோபி, தேவராஜ், சக்திவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் 2 தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி தட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகள் ஜெனனி (வயது 24), எம்.எஸ்சி பட்டதாரி. இவர் கடந்த 2-ம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பிதுரை மகளை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தந்தை தம்பிதுரை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண் ஜெனனி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் ஜெனனியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியாதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடக்கும் திருமண விழாவிற்கு வேனில் 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நள்ளிரவு வந்தனர். வேனை சேலத்தை சேர்ந்த தினேஷ் ஓட்டினார்.

    இந்த வேன் இன்று காலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாராக ஓடியது. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர். தறிகெட்டு ஓடிய வேன் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பாகம் முழுவதும் நொறுங்கியது. வேனில் இருந்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுபற்றி தகவலை விருத்தாசம் போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது வேன் மரத்தில்மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×