search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "negligence"

    • கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை பாளை மணப்படைவீடு பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். நாஞ்சான்குளத்தை சேர்ந்த லாசர் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    விபத்து-காயம்

    பேட்டை- சேரன்மாதேவி ரோட்டில் பேட்டை போலீஸ் நிலையத்தை கடந்து வளைவு பகுதியில் சென்ற போது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையின் ஓரத்தில் இருந்த தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    மேலும் இந்த விபத்தின் போது அதன் அருகில் இருந்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும், தபால் பெட்டியும் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 2-வது நாளாக இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேகத்தடை கோரிக்கை

    நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் 2 பக்க வளைவிலும், தபால் நிலையம் அருகே 2 வளைவிலும் வேகத்தடைகள் அமைக்கக்கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் கடந்த ஆண்டு இதுதொடர்பாக அதன் தலைவர் அய்யூப், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தார். அந்த குழுவின் உத்தரவின்பேரில் ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வளைவிலும் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க போக்குவரத்து கமிட்டியிடம் அனுமதி பெற்றதும் அமைப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

    இதுதொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட வில்லை. விரைவாக அமைத்திருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுத்தி ருக்கலாம் என்றும், இந்த விபத்துக்கு நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமே காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்ற னர்.

    • 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
    • அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.

    இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் கம்பங்களுக்கு அருகே சிமென்ட் மேடை அமைத்து அதில் தற்காலிகமாக மின்மாற்றியை பொருத்தினர். 

    இந்நிலையில் தற்போது மின் கம்பங்களில் கம்பிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்கின்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கொள்முதல் மையத்தில் 400 மூடை நெல் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
    • சிங்கம்புணரி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு நீர்நிலைகள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை கையொடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்தன. 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் இங்கு நெல் நடவு செய்யப்பட்டது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் நெற்கதிர்கள் முளைத்து மகசூல் கிடைத்தது. தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.

    சிங்கம்புணரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை மூடை மூடையாக விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் இதில் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மூடைக்கு ரூ.50 கமிஷன் கொடுத்தால் தான்நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்ப டுகிறது. இதில் பணம் கொடுத்த விவசாயிகள் நெல் மூடைகள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கொள்முதல் செய்வதாகவும், பணம் கொடுக்காதவர்களை அலைக்கழிப்பதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வரை எஸ்.எஸ்.கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் பெய்த மழை கரணமாக நல்ல மகசூல் கிடைத்தது. விளைந்த நெல்களை அரசிடம் விற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் வந்தால், அதனை வாங்காமல் அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். மேலும் கமிஷனும் கேட்கிறார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • பெரியார் பஸ் நிலைய சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்தது.

    மதுரை

    மதுரை அம்பலத்தாடியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 45). சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். பெரியார் மேம்பால சிக்னலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்புராமன் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முன்பு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது வழக்கம்.

    அவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் (நேதாஜி ரோடு), கட்டபொம்மன் சிலை அருகில் பிரத்யேக பூத்துகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் போலீசார் 24 மணி நேரமும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர்.

    பெரியார் மேம்பால சிக்ன லில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. பெரியார் மேம்பாலத்தில் சிக்னலின்றி வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வாகனங்கள் அத்துமீறி செல்கின்றன.

    இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்ப தில்லை. அதேபோல் பெரி யார் மேம்பாலத்தில் போக்கு வரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மதிப்பதும் இல்லை.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி பெரி யார் மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதி முறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோன்று காள வாசல் சிக்னலிலும் போலீசார் பெரும்பாலும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்துள்ளனர். தானி யங்கி சிக்னல் என்பதால் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. தானியங்கி சிக்னல் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்று விடுவார்கள் என்ற அலட்சிய போக்கு போலீசாருக்கு உள்ளது.

    சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினால்தான் வாகன ஓட்டிகளும் சீராக சென்று வருவார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். காளவாசல் சிக்னல் பகுதியிலும் போலீசார் சாலையில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×