search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் சுவரில் மோதிய விபத்தில் காயம் அடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    விபத்து நடந்த தபால்நிலையம்-ஒர்க்‌ஷாப்பை படத்தில் காணலாம்.

    பேட்டையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் சுவரில் மோதிய விபத்தில் காயம் அடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை

    • கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை பாளை மணப்படைவீடு பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். நாஞ்சான்குளத்தை சேர்ந்த லாசர் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    விபத்து-காயம்

    பேட்டை- சேரன்மாதேவி ரோட்டில் பேட்டை போலீஸ் நிலையத்தை கடந்து வளைவு பகுதியில் சென்ற போது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையின் ஓரத்தில் இருந்த தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    மேலும் இந்த விபத்தின் போது அதன் அருகில் இருந்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும், தபால் பெட்டியும் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 2-வது நாளாக இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேகத்தடை கோரிக்கை

    நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் 2 பக்க வளைவிலும், தபால் நிலையம் அருகே 2 வளைவிலும் வேகத்தடைகள் அமைக்கக்கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் கடந்த ஆண்டு இதுதொடர்பாக அதன் தலைவர் அய்யூப், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தார். அந்த குழுவின் உத்தரவின்பேரில் ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வளைவிலும் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க போக்குவரத்து கமிட்டியிடம் அனுமதி பெற்றதும் அமைப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

    இதுதொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட வில்லை. விரைவாக அமைத்திருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுத்தி ருக்கலாம் என்றும், இந்த விபத்துக்கு நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமே காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்ற னர்.

    Next Story
    ×